வவுனியாவில் வாகன விபத்து; ஆசிரியை பலி
வவுனியா சாந்தசோலை சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்த ஆசிரியையின் சடலம் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக, வவுனியா தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறினார்.
புதிய சினக்குளம் பாடசாலையில் கடமையாற்றும் 38 வயதுடைய ஒரு குழந்தையின் தாயான சுகன்யா அகிலன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
புகையிர பாதை திருத்தப் பணிக்காக பளை நோக்கி பயணித்த டிப்பர் வண்டி ஒன்றுடன், இவர் செலுத்திய மோட்டார் சைக்கிள் மோதி இன்று பிற்பகல் 2.45 அளவில் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் டிப்பர் வண்டியை செலுத்திய இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டார்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியாவில் வாகன விபத்து; ஆசிரியை பலி
Reviewed by NEWMANNAR
on
February 24, 2014
Rating:

No comments:
Post a Comment