அண்மைய செய்திகள்

recent
-

அனந்தி ஜெனீவா பயணமானார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஜெனிவாவுக்கு
பயணமாகியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் நடைபெறவுள்ளன . அதனை நோக்காக கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனும் பயணமாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது .

எனினும் வடமாகாண சபையின் கடந்த கூட்டத்தில் ஐ . நா மனித உரிமை பேரவை அமரவுகளில்வடக்கு உறுப்பினர்களும் கலந்து கொண்டு உண்மை நிலையினை சர்வதேசத்திற்கு தெரிவிக்கஅனுமதி வழங்க வேண்டும் என அனந்தி சசிதரனால் பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டு நிறைவேற்றமும் செய்யப்பட்டது .


அதன்போது குறித்த அமர்வில் கலந்து கொள்ள அனந்தியே பொருத்தமானவர் என முதலமைச்சரால் முன்மொழியப்பட்டதுடன் அவருக்கு அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது .

எனினும் அவர் தனக்கு அச்சுறுத்தல் உள்ளளதாகவும் தான் ஜெனீவா கூட்டத் தொடரில் கலந்து கொள்ளவில்லை என்றும் ஊடகங்களுக்கு அறிவித்திருந்தார் .

இருப்பினும் நேற்று மாலை அவர் ஜெனீவாவிற்கு பயணமாகிவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

அனந்தி ஜெனீவா பயணமானார். Reviewed by NEWMANNAR on February 13, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.