அண்மைய செய்திகள்

recent
-

ட்விட்டரில் இருந்து விலகினார் யுவன்

இஸ்லாத்தைப் பின்பற்றுவது தொடர்பாக எழுந்த விமர்சனங்களின் எதிரொலியாக, தீவிரமாக இயங்கி வந்த ட்விட்டர் தளத்தில் இருந்து இசைமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா விலகியுள்ளார்.

இசையமைப்பாளர்களில் தொடர்ச்சியாக ட்விட்டர் தளத்தில் இயங்கி வந்தவர் யுவன் சங்கர் ராஜா.

தான் இசையமைக்கும் படங்கள் பற்றிய செய்திகள், பாடல்கள் பற்றிய குறிப்புகள் அனைத்தையும் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டு வந்தார்.

தற்போது இஸ்லாம் மதத்தினைத் தழுவியுள்ளார் யுவன். இச்செய்தி பல நாட்களாக இணையத்தில் உலவி வந்த போதும், தனது ட்விட்டர் தளம் மூலமே அதனை உறுதி செய்தார் யுவன்.

” நான் மூன்றாவது திருமணம் செய்துகொள்ளவில்லை. அச்செய்தி பொய்யானது. ஆம். நான் இஸ்லாம் மதத்தினைப் பின்பற்றுகிறேன். எனது குடும்பத்தினர் எனது முடிவை ஏற்றுக்கொண்டார்கள். எனக்கும் என் அப்பாவிற்கும் எந்தவிதத்திலும் கருத்து வேறுபாடு இல்லை” என்று இறுதியாக தனது ட்விட்டர் தளத்தில் ட்விட்டினார்.

தொடர்ச்சியாக, யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுவது தொடர்பாக அவரது ட்விட்டர் தளத்தில் ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சித்த வண்ணம் இருந்தனர்.

இந்த எதிர்வினையை எதிர்கொள்ள விரும்பாத யுவன் சங்கர் ராஜா, தனது ட்விட்டர் கணக்கை முடக்கிவிட்டார்.

யுவனின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளமான @Raja_Yuvan என்ற கணக்கு இப்போது இல்லை.a
ட்விட்டரில் இருந்து விலகினார் யுவன் Reviewed by NEWMANNAR on February 13, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.