அண்மைய செய்திகள்

recent
-

மண் அகழ்விற்கு எதிரான ஆர்ப்பாட்டம் பேசாலையில் -படங்கள்

மன்னார் தீவு பகுதியில் மண் அகழ்வுசெய்வதை தடைசெய்யக்கோரி மன்னார் பேசாலை பகுதியில் இன்று காலை குறித்த பகுதி மக்களால் ஏற்;பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் ஓன்று நடைபெற்றது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்; பேசாலை பத்திமா ஆலயத்தில் இருந்து புறப்பட்டு பேசாலை பிரதான வீதிவரை ஊர்வலமாக சென்று குறித்த பகுதியில் உள்ள சந்தியில் வீதி இருமருங்கிலும் சுலோகங்களை ஏந்தியவாறு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தமது கோரிக்கைகளை தெளிவு படுத்தும் வகையிலான சுலோகங்களை ஏந்தியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காலை 9 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த மண் அகழ்விற்கு எதிரான போராட்டம் 10 மணிவரை நடைபெற்றது.
இதன் போது குறித்த பகுதியில் பொலிசார் குவிக்கப்பட்டிருந்ததோடு குறித்த பகுதிக்கு வருகைதந்த தலை மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜமீல் குறித்த மக்களுடன் பேச்சுவார்தையில் ஈடுபட்டார்.

இதன் போது குறித்த பகுதி மக்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர். குறித்த கோரிக்கைகளை கவனத்தில் எடுத்துக் கொண்ட பொலிஸ் அதிகாரி குறித்த விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததோடு மன்னார் தீவு பகுதியில் எடுக்கப்படும் மண் தீவிற்கு வெளியில் கொண்டு செல்லாத வகையில் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

எனினும் குறித்த மண் அகழ்விற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பின் குறித்த அனுமதியினை நீதிமன்றத்தின் ஊடாகவே நிறுத்த முடியும் என தெரிவித்த எனினும் அவ்வாறு இருப்பின் நீதிமன்றத்தை அனுகும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் பொலிஸ் அதிகாரி உடனான பேச்சு திருப்தி அளித்த நிலையில் குறித்த ஆர்ப்பாட்டம் 10 மணியளவில் நிறைவுற்றது.

மன்னார் தீவு பகுதியில் மண் அகழ்வு பரவலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக தீவு பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்த போதிலும் இது தொடர்பாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை
இந்நிலையிலேயே இன்று குறித்த ஆர்ப்பாட்டம் பேசாலையில் முன்னெடுக்கப்பட்டது.

குறிப்பாக பேசாலையில் கடற்கரையை அண்மித்த பகுதியில் மண் திட்டிகள் காணப்படுகின்றன. இவ் மண் திட்டிகள் அகழ்வு செய்யப்பட்டுவருகிறது.
இதனால் எதிர்காலத்தில் குறித்த பகுதியில் நிலத்திற்கடியிலுள்ள நீர் உவர் நீராகுவதற்கு சந்தர்ப்பம் இருப்பது மட்டுமல்லாமல்  சூழல் பாதீப்புகளும் இடம் பெறுவதற்கு இது ஏதுவாக அமையும் என்ற வகையில் குறித்த மண் அகழ்வு செய்வதை உடன் நிறுத்துமாறு குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது

இதேவேளை குறித்த பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வட மாகாண சபை உறுப்பினர்களான பிறிமுஸ் சிராய்வா மற்றும் குணசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்






மண் அகழ்விற்கு எதிரான ஆர்ப்பாட்டம் பேசாலையில் -படங்கள் Reviewed by Author on February 02, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.