அண்மைய செய்திகள்

recent
-

நாளை மீண்டும் திருக்கேதீஸ்வர புதைகுழி அகழ்வுவேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் கண்டுப் பிடிக்கப்பட்ட மனித புதை குழி அகழ்வு கடந்த மாதம் இறுதியில் இடை நிறுத்திய நிலையில்;  நாளை திங்கள் கிழமை (10.2.14) மீண்டும் ஆரம்பபிக்கப்படவுள்ளது.

   கடந்த டிசம்பர் மாதம் 20 ந் திகதி திருக்கேதீஸ்வரம் ஆலய பகுதியிலிருந்து மாந்தை பகுதிக்கு குடி நீர் வழங்கல் திட்டத்திற்கு அமைய வீதியோரத்திற்கு அருகாமையில் நிலத்தடி ஊடாக குழாய்கள் பதிக்கும் வேலைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது குறித்த பகுதியில் தற்பொழுது அகழ்வு செய்யப்படும் மனித புதைக் குழி கண்டுபிடிக்கப்பட்டது.

   இதைத் தொடர்ந்து இவ் விடயம் மன்னார் நீதிபதியின் கவனத்துக்கு பொலிசாரால் கொண்டுச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து அதே மாதம் 23 ந் திகதி இவ் மனித புதை குழியை அகழ்வு செய்ய மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி செல்வி ஆனந்தி கனகரட்ணம் உத்தரவுட்டிருந்தார்.

  அன்றிலிருந்து கடந்த 31.01.2014 வெள்ளிக் கிழமை வரை 19 தடவைகள் இவ் மனித புதை குழியில் மன்னார் நீதிபதி செல்வி ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையிலும் அனுராதப்புரம் சட்ட வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி டீ.எல்.வைத்தியரத்தின தலைமையிலும் இவ் அகழ்வுப் பணி இடம்பெற்றன.
   இதன்போது இன்றுவரை 54 மண்டையோடுகளும் எச்சங்களும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதுடன் கண்டுபிடிக்கப்பட்டவற்றில் 28 மனித எலும்புக் கூடுகள் இக் குழிக்குலிருந்து வெளி எடுக்கப்பட்டு பெட்டியில் பாதுகாப்பான முறையில் அடைக்கப்பட்டு நீதிபதியின் முன் ஆஐர்படுத்தப்பட்ட நிலையில் தற்பொழுது மன்னார் பொது வைத்தியசாலையின் ஒரு பிரத்தியேக அறையில் ஆய்வுக்கு கொண்டுச் செல்வதற்காக பாதுகாப்பான முறையில் வைக்கப் பட்டுள்ளது.

   மீண்டும் ஒன்பது தினங்களுக்குப் பின் நாளை (10) ,20 வது தடவையாக இவ் மனித புதைக் குழி அகழ்வு மன்னார் நீதிபதி செல்வி கே.ஆனந்தி முன்னிலையில் சட்ட வைத்திய நிபுனர் வைத்திய கலாநிதி டீ.எல். வைத்தியரத்தின தலைமையில் நடைபெறவுள்ளது.

நிலமட்டத்தின் மூன்று மட்டமான நிலையில் அகழ்வு செய்யப்பட்டிருக்கும் இக் குழியில்  நாளை பெரும்பாலும் ஒரே மட்டத்துக்கு அகழ்வு செய்யக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாக தெரியவருகிறது
.



நாளை மீண்டும் திருக்கேதீஸ்வர புதைகுழி அகழ்வுவேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது Reviewed by Author on February 09, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.