காணாமற் போனவர்கள் தொடர்பான ஆணைக்குழுவின் பணிக்காலம் நீடிப்பு
bbbb.jpg)
வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணாமற் போனோர் தொடர்பாக விசாரணை செய்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் பணிப்பாணையை மேலும் ஆறு மாதங்களுக்கு அதாவது 2014 ஒகஸ்ட் 12ஆம் திகதி வரை ஜனாதிபதி நீடித்துள்ளார்.
ஆணைக்குழு இற்றைவரை நாடு முழுவதிலும் இருந்து சுமார் 16,000 முறைப்பாடுகளைப் பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற முதற் சுற்று விசாரணைகள் 2014 பெப்ரவரி 17ஆம் திகதி நிறைவடைந்தன. அதன்போது 2014 ஜனவரி 18 முதல் 21 வரை கிளிநொச்சியிலும் இவ்விசாரணை நடந்தது.
மெக்ஸ்வெல் பராக்கிரம பரணகம (தலைவர்), பிரியந்தி சுரஞ்ஜனா வைத்தியரத்ன, மனோ ராமநாதன் ஆகிய மூவர் இவ்வாணைக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். இவ்வாணைக்குழு 1990 ஜூன் 10ஆம் திகதி முதல் 2009 மே 19ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் காணாமற் போனவர்கள் அல்லது கடத்தப்பட்டவர்கள் தொடர்பான விசாரணையை மேற்கொண்டு அறிக்கையை தயாரித்தது.
காணாமற் போனவர்கள் தொடர்பாக விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிகள் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் 9.51வது பரிந்துரைக்கு அமைவாக நடைபெற்றன.
காணாமற் போனவர்கள் தொடர்பான ஆணைக்குழுவின் பணிக்காலம் நீடிப்பு
Reviewed by Author
on
February 21, 2014
Rating:
bbbb.jpg)
No comments:
Post a Comment