திருக்கேதீஸ்வரம் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை இன்றுடன் 74
திருக்கேதீஸ்வரம் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை இன்றுடன் 74
மன்னார் திருக்கேதீஸ்வரப் பகுதியில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் மனிதபுதை குழி அகழ்வுப் பணியின்போது இன்றும் மேலும் ஜந்து மனித மண்டையோடுகள் கண்டுப் பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.
மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதிபதி செல்வி ஆனந்தி கனகரெட்ணம் முன்நிலையில் சிசேட சட்டவைத்திய நிபுணர் டி.எல்.வைத்திய ரெட்ண தலைமையிலான குழுவின் பங்குபற்றுதலுடன் இன்று வியாழக்கிழமை காலை 8:30 முதல் பிற்பகல் 2மணிவரை குறித்த மனித புதைகுழி அகழ்வு பணிகள் நடைபெற்றது.
இதன் போதே குறித்த ஜந்து மண்டைஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
கடந்தடிசம்பர் மாதம் 20 ந் திகதி திருக்கேதீஸ்வர ஆலயப் பகுதியிலிருந்து மாந்தை பகுதிக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் நிலத்தடியில் குழாய்கள் பதிக்;கும் வேலைகள் நடைபெற்ற சமயம் மனிதஎச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து மன்னார் நீதவான் நீதிமன்றநீதிபதி ஆனந்தி கனகரட்ணத்தின் உத்தரவிற்கமைவாக குறித்த மாதம் 23 ந் திகதி இவ் மனிதபுதை குழி அகழ்வுவேலை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
மனிதபுதை குழி அகழ்வு இன்று 27 தடவையாக இடம்பெற்றறிருந்தது.
ஏற்கனவே நேற்று வியாழக்கிழமை வரை 69 மனிதமண்டையோடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தநிலையில் இன்று மேலும் ஜந்து (5) மண்டையோடுகள் இவ் புதைகுழிக்குள் இருந்துகண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்றுடன் இதன் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளன.
அத்துடன் ஏற்கனவே கண்டுப்பிடிக்கப் பட்டிருந்த எலும்புக் கூடுகளில் ஒன்பது (9) இன்று புதைகுழியிலிருந்து வெளியேற்றப்பட்டு பொதிசெய்யப்பட்டு மன்னார்வைத்தியசாலைக்கு பாதுகாப்பாக எடுத்து செல்லப்பட்டுள்ளது.
இதனை அடுத்து புதை குழியிலிருந்து எடுக்கப்பட்டு பொதிசெய்யப்பட்ட பெட்டிகளின் எண்ணிக்கை 60 ஆகவும் அதிகரித்துள்ளது.
இன்று கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுளில் சில சிதைந்த நிலையில் காணப்பட்டது கைகள் கால்கள் அற்ற நிலையில் இவைகள் காணப்பட்டதுடன் இன்று மீட்க்கப்பட்டதில் ஒன்று இடுப்பு பகுதியிலிருந்து கால்பகுதிவரையான பகுதி இல்லாத நிலையில் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது
மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி செல்வி ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் அனுராதபுரத்திலிருந்துவருகைதரும் சட்டவைத்திய நிபுணர் டீ.எல்.வைத்தியரட்ண தலைமையில் சட்டவைத்திய அதிகாரிகள் தொல்பொருள் ஆராய்ச்சிஅதிகாரிகள் உட்படபொலிசாரும் இணைந்துசுமார் இவ் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
நாளை வெள்ளிக்கிழமை குறித்த மனிதபுதைகுழி 28 தடவையாக அகழ்வுசெய்யப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.
திருக்கேதீஸ்வரம் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை இன்றுடன் 74
Reviewed by Author
on
February 20, 2014
Rating:

No comments:
Post a Comment