அண்மைய செய்திகள்

recent
-

66ஆக அதிகரித்திருக்கும் திருக்கேதீஸ்வரம் எலும்புக்கூடுகள்

திருக்கேதீஸ்வரம் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 66 ஆக உயர்வு
திருக்கேதீஸ்வரத்தில் மனித எச்சங்களை தேடும்பணி இன்று செவ்வாய்க்கிழமை 18.02.2014 நடைபெற்றது.இதன்போது புதிதாக மூன்று மண்டை ஓடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து எலும்புகூடுகளின் எண்ணிக்கை அறுபத்தாறாக (66) உயர்ந்துள்ளது

மன்னார் திருக்கேதீஸ்வரப் பகுதியில் மேற்கொள்ளப் பட்டுவரும் மனித புதைகுழி அகழ்வுப் பணி இன்று  செவ்வாய்கிழமை  இருபத்தி ஜந்தாவது (25) தடவையாக நடைப்பெற்றது.
மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதிபதி செல்வி ஆனந்தி கனகரெட்ணம் முன்நிலையில்; சட்டவைத்திய நிபுணர் டி.எல். வைத்தியரெட்ண தலைமையிலான குழுவின் பங்குபற்றுதலுடன் இன்று செவ்வாய்கிழமை குறித்த புதை குழியில் மனித எச்சங்களை தேடும் பணியின்போதே மேலும் மூன்று மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.  
இதேவேளை ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகள் ஜந்து புதை குழியிலிருந்து துப்பரவு செய்யப்பட்டு இலக்கமிடப்பட்டு பெட்டியில் பொதி செய்யப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த திங்கழ்கிழமை வரை (17.02.2014) 42 எலும்புக்கூடுகள் பொதி செய்யப்பட்ட பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று ஜந்து எலும்புக்கூடுகள் பொதி செய்யப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு எடுத்து செல்லப்பட்டதை அடுத்து  புதை குழியிலிருந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 இதேவேளை நாளை புதன்கிழமை மீண்டும் மனித எச்சங்கனை நோக்கிய அகழ்வு பணி நடைபெறவுள்ளது. 








66ஆக அதிகரித்திருக்கும் திருக்கேதீஸ்வரம் எலும்புக்கூடுகள் Reviewed by Author on February 18, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.