மன்னாரில் அரச ,தனியார் போக்குவரத்துத் துறையினர்களுக்கிடையில் முறுகல் .பயணிகள் பல்வேறு இடர்களுக்கும் , தாமதமான பயணங்களுக்கும் முகம் கொடுப்பதாக விசனம்
மன்னார் நகரிலிருந்து உள்ளுர் மற்றும் வெளியூர் போக்குவரத்தில் அரச மற்றும் தனியார் பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன .
இந்நிலையில் இரு தரப்பினர்களுக்குமிடையில் திடீர் , திடீர் என முறுகல் நிலை ஏற்படுகின்றது .
அவ்வப்போது இவர்களுக்கிடையில் முறுகல் நிலை , கைகலப்பு , பொலிஸ் முறைப்பாடு , விசாரணை என்று விரிவடைந்து பின் போக்குவரத்து அமைச்சு எனும் நிலை வரையிலும் நீடிக்கின்றது .
அண்மை காலமாக வடமாகாணத்தில் போக்குவரத்து சேவைகளில் ஈடுபட்டு வரும் தனியார் பேரூந்துகள் தமக்குள்ளும் , இலங்கை போக்குவரத்து சபையுடனும் மோதிக்கொள்ளுகின்ற சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது .
இந்நிலையில் யாழ் மாவட்டத்தில் அரச மற்றும் தனியார் பேரூந்துகள் ஒன்றிணைந்த நேர சூசி அடிப்படையில் சேவையில் ஈடுபடுவதற்கு இணக்கம் தெரிவித்திருக்கின்றன . இதனால் பயணிகள் பல்வேறு இடர்களுக்கும் , தாமதமான பயணங்களுக்கும் முகம் கொடுப்பதாக விசனம் தெரிவித்துள்ளனர் .
இது இவ்வாரிருக்க அரச மற்றும் தனியார் பேரூந்துகள் தமக்கு வழங்கப்பட்டிருக்கும் நேர அட்டவணையினை சரிவரப் பின் பற்றுவார்களாயின் தேவையற்ற பிரச்சிணைகள் வராது என வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா . டெனிஸ்வரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது .
மன்னாரில் அரச ,தனியார் போக்குவரத்துத் துறையினர்களுக்கிடையில் முறுகல் .பயணிகள் பல்வேறு இடர்களுக்கும் , தாமதமான பயணங்களுக்கும் முகம் கொடுப்பதாக விசனம்
Reviewed by NEWMANNAR
on
February 09, 2014
Rating:

No comments:
Post a Comment