அண்மைய செய்திகள்

recent
-

எதிர்கால கட்டுமானத் திட்டங்களுக்கான விருதுகள் (படங்கள் இணைப்பு)

கட்டிடக்கலையில் எதிர்கால கட்டுமானத் திட்டங்களுக்கான விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு விருது பெற்ற சில எதிர்காலக் கட்டுமானத் திட்டங்களின் படங்களை இங்கே காணலாம்.

எதிர்கால கட்டுமானத் திட்டங்களுக்கான விருதுகள் பெற்ற படங்கள் மற்றும் இடங்கள்

01. முதல் பரிசு ஒசாமு மொரிஷிதா என்பவர் வடிவமைத்த அடுத்த தலைமுறைக்கான சரக்கு துறைமுகத்துக்கு சென்றது.


02. பெரிய நகர்ப்புற திட்டங்கள் என்ற பிரிவில் வெற்றி பெற்றது பால் லுகேஸ் என்பவர் வடிவமைத்த சீன ஏரி கட்டுமான திட்டம்.



03. கலாச்சார புதுப்பொலிவு பிரிவில் வெற்றி பெற்றது மொரோக்கோவின் லல்லா யெட்டூனோ அரண்மனைக்கு மொசெஸ்ஸெய்ன் நிறுவனம் தந்திருந்த வடிவமைப்பு ஆகும்.



04. கலவையான புழக்கம் என்ற பிரிவில் வெற்றி பெற்றது பெய்ஜிங்கின் புறநகர்ப் பகுதிக்கு வான்கே ஜியுகோங் வடிவமைத்துக் கொடுத்த திட்டம் ஆகும்.


05. அலுவலக கட்டிடங்கள் பிரிவில் வெற்றி பெற்றது ஜெர்மனியின் டஸ்ஸடோர்ஃப் நகருக்கு ஃபிளிக் கோக் வடிவமைத்துக் கொடுத்த கட்டிடம் ஆகும்.


06.பழமையும் புதுமையும் என்ற பிரிவில் விருது வென்றது இத்தாலியின் பெரெஸியா நகர அரசு வீடுகளுக்கு லூகா பரெல்டா ஸ்டூடியோ நிறுவனம் வடிவமைத்து தந்த திட்டம் ஆகும்.



07. நில மேம்பாட்டு பெருந்திட்டம் பிரிவில் வெற்றி பெற்றது நெதர்லாந்தின் நீயிமெகென் பகுதிக்காக பாக்கா நிறுவனம் தீட்டிக்கொடுத்த வடிவமைப்பு ஆகும்.

08. குடியிருப்புக் கட்டிட பிரிவில் வெற்றி பெற்றது மும்பையில் ஸ்கை கோர்ட்ஸ் என்ற பெயரில் சஞ்சய் பூரி என்ற கட்டிடக்கலைஞர் வடிவமைத்த திட்டம் ஆகும்.


09.விளையாட்டுப் பிரிவில் வெற்றி பெற்றது இங்கிலாந்திலுள்ள அல்ஃபிரிஸ்டொன் பள்ளிக்கூடத்து நீச்சல் குள்ளத்துக்கு டக்கன் மோரிஸ் நிறுவனம் தீட்டிய வடிவமைப்பு ஆகும்.



10.உயரமான கட்டிடங்கள் பிரிவில் கிழக்கு லண்டனுக்காக ஹெர்ஸாக் நிறுவனம் வடிவமைத்த ஒன் உட் வார்ஃப் என்ற கோபுரம் ஆகும்.



11.சில்லரை வணிகம் மற்றும் பொழுதுபோக்கு பிரிவில் வெற்றி பெற்றது துருக்கி இஸ்தான்புல்லின் சந்தைக்கு சுயாபத்மாஸ் நிறுவனம் வடிவமைத்து கொடுத்த மாற்றம் ஆகும்.


எதிர்கால கட்டுமானத் திட்டங்களுக்கான விருதுகள் (படங்கள் இணைப்பு) Reviewed by NEWMANNAR on March 10, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.