கதிர்காமத்தில் வீடொன்றுக்கு தீ வைக்கப்பட்டதால் மூவர் பலி
கதிர்காமத்தில் வீடொன்றுக்கு தீ வைக்கப்பட்டதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் சிறுமி ஒருவர் உள்ளிட்ட மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்திட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அவர்கள் கராப்பிட்டிய, ஹம்பாந்தோட்டை மற்றும் கதிர்காமம் ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
நேற்றிரவு 9.20 அளவில் வீடொன்றில் தீ பரவிவருவதாக கிடைத்த தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மக்களுடன் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
பின்னர் மெற்கொள்ளப்பட்ட சோதனையின்போது தீயில் கருகி உயிரிழந்த வீட்டுரிமையாளர் மற்றும் அவரது மனைவி ஆகியோரது சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொரு பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்
நீண்டகாலமாக தமது மனைவியுடன் நிலவிய தகராறு காரணமாக வீட்டுரிமையாளரே தமது வீட்டுக்கு தீ வைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதற்கமைய மேலதிக விசாரணை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்
கதிர்காமத்தில் வீடொன்றுக்கு தீ வைக்கப்பட்டதால் மூவர் பலி
Reviewed by NEWMANNAR
on
March 10, 2014
Rating:

No comments:
Post a Comment