அண்மைய செய்திகள்

  
-

100 வருடம் பழைமயான காணியினை பெற்றுதருமாறு மறிச்சுக்கட்டி முஸ்லிம் மக்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள் )

கடற்படையினர் முகாம் அமைப்பதற்காக கைப்ப்ற்றியுள்ள தமது விவசாய காணிகளைத் திருப்பித் தரவேண்டும் எனக்கோரி, மன்னார் முசலி பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட மறிச்சுக்கட்டி, மரைக்கார்தீவு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இன்று வீதி மறிப்புப் போராட்டத்தி;ல் ஈடுபட்டிருந்தனர்.


இதனால் மறிச்சுக்கட்டி ஊடான மன்னார் கற்பிட்டி வீதியில் சில மணித்தியாலங்கள் வாகனப் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்திருந்தது.


கடந்த 2009 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளினால் வெளியேற்றப்பட்ட இந்தக் கிராமத்து மக்கள் மீண்டும் 2010 இல் மீள்குடியேறியபோது கடற்படையினர் இந்த மக்களின் விவசாய காணிகளைக் கையகப்படுத்தியிருந்தனர்.
இடம்பெயர்ந்து சென்ற குடும்பங்கள் பல்கிப் பெருகியதால் மீள்குடியேற்றத்தின்போது அதிகரித்துள்ள குடும்பங்கள் குடியேறுவதற்குக் காணிகள் வழங்கப்படவில்லை.


கடற்படையினர் அபகரித்த காணிகளைக் கோரியும் காணியற்றவர்களுக்குக் காணிகள் கோரியும் கடந்த நான்கு வருடங்களாக நடத்தப்பட்ட பேச்சுக்கள் போராட்டங்களுக்கு உரிய நடவடிக்கை இல்லாத காரணத்தினாலேயே இந்த வீதிமறிப்பு கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.


ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களைக் கலைத்து வீதிப் போக்குவரத்தை சீர் செய்வதற்கு பொலிசார் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காததால், கலகம் அடக்கும் பொலிசார் வரவழைக்கப்பட்டு, ஆர்ப்பாட்டக்காரர்கள் அச்சுறுத்தப்பட்டனர்.


அப்போது அங்கு சென்று நிலைமைகளை அவதானித்த முசலி பிரதேச சபைத் தலைவர் எஹியான் குறுக்கிட்டு பொலிசாரையும் ஆர்ப்பாட்டக்காரர்களையும் சமாதானப்படுத்தி, இது தொடர்பில் நாளை திங்கட்கிழமை அமைச்சர் ரிசாட் பதியுதீன் தலைமையில் அரசாங்க அதிபர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்ளும் கூட்டம் ஒன்றைக் கூட்டி, பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என உறுதியளித்ததையடுத்து, வீதியூடான போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்பட்டது.


எனினும் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வரையில் தாங்கள் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர்.






100 வருடம் பழைமயான காணியினை பெற்றுதருமாறு மறிச்சுக்கட்டி முஸ்லிம் மக்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள் ) Reviewed by NEWMANNAR on March 09, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.