காமுகர்களால் வாழ்வு சீரழிக்கப்பட்ட பத்தொன்பது வயது இளம்பெண்.
யாழ்ப்பாணத்தில் 19 வயதுடைய இளம்பெண்ணொருவரை மூன்று நபர்கள் பாலியல்
வல்லுறவுக்குட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
நேற்று மாலை யாழ் . துன்னாலை பகுதியிலுள்ள யாக்கரை மயானத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர் .
இச்சம்பவத்தில் தென்மராட்சி வரணி இடைக்குறிஞ்சியை சேர்ந்த இளம் பெண்ணே பாதிக்கப்பட்டுள்ளார் .
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,
குறித்த பெண் , இளைஞனொருவருடன் வடமராட்சி , வல்லிபுரம் ஆழ்வார் ஆலயத்திற்குச் சென்று வழிபாடுகளை முடித்துவிட்டு திரும்பியுள்ளனர் .
இந்நிலையில் , இருவரையும் வழிமறித்த மூன்று நபர்கள் இளைஞனைத் தாக்கிவிட்டு , யுவதியினை தூக்கிச் சென்று யாக்கரை மயானத்தில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர் .
இதனையடுத்து , மூவரும் சென்றபின்னர் குறித்த இளைஞன் நெல்லியடிப் பொலிஸாரிற்கு தொலைபேசியில் தகவல் வழங்கியுள்ளார் .
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் யுவதியினையும் இளைஞனையும் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் .
அத்துடன் , யுவதியை வல்லுறவுக்குட்படுத்தியவர்களின் ஒருவரின் கைப்பையினை ( பேர்ஸ் ) கைப்பற்றிய பொலிஸார் அதனை வைத்து பாலச்சந்திரன் பிரபாகரன் என்ற நபரைப் தேடி வருவதாக தெரிவித்தனர் .
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
காமுகர்களால் வாழ்வு சீரழிக்கப்பட்ட பத்தொன்பது வயது இளம்பெண்.
Reviewed by NEWMANNAR
on
March 09, 2014
Rating:

No comments:
Post a Comment