கிளிநொச்சியில் இணையச்சேவை நிலையங்கள் மேற்பார்வை
மாணவர்கள் மற்றும் ஏனையோரின் நலன் கருதி கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இணையச்சேவை நிலையங்களை செவ்வாய்க்கிழமையிலிருந்து (11) மேற்பார்வை செய்யவுள்ளதாக கிளிநொச்சி மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இணையச்சேவை நிலையங்களில் மாணவர்கள் இணையத்தை பார்வையிடுவதை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் இணையச்சேவைகளை திறம்பட வழங்குவதை மேற்பார்வை செய்வது தொடர்பிலும் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் திங்கட்கிழமை (10) கலந்துரையாடப்பட்டது.
இதில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
எமது மாவட்ட மாணவர்கள் மற்றும் ஏனையோரின் நலன் கருதி, இணையச்சேவை நிலையங்களை மேற்பார்வை செய்து சில கட்டுப்பாடுகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.
பாடசாலை வேளைகளில் மாணவர்கள் இணையச்சேவை நிலையங்களுக்கு செல்வது தடைசெய்தல்.
இணையச்சேவைகளை பயன்படுத்தும் மாணவர்களின் பெயர், முகவரி, பயன்படுத்தும் நேரம், பாடசாலையின் பெயர் ஆகியவற்றை உள்ளடக்கியதான பதிவேடு மேற்கொள்ளுதல்.
மாணவர்கள் என்ன விடயத்தை இணையத்தில் பார்வையிடுகின்றனர் என்பதை கண்காணித்தல்.
கணினியுள்ள இடத்தை மூடப்பட்ட இடமாக இல்லாது திறந்தவாறு வைத்திருத்தல்.
இணையச்சேவை நிலையத்துக்கு மாணவர் ஒருவர் தொடர்ந்து வருவாராயின் அவரது பெயர், முகவரி, பாடசாலையின் பெயர் போன்றவற்றை தேசிய சிறுவர் பாதுகாப்புச் சபையின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்துக்கு தெரியப்படுத்தல்.
க.பொ.த. சாதாரண தரத்துடன் கல்வியை நிறுத்தியவராக கூறும் ஒருவரின் வயதை உறுதிசெய்வதற்காக தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பதிதல்.
மாணவர்கள் பயன்படுத்தக்கூடாத இணையச்சேவைகளை பாவிப்பதை தடுப்பதற்கு கண்காணித்தல் ஆகிய தீர்மானங்களை முன்னெடுத்ததாகவும் அவர் கூறினார்.
இக்கலந்துரையாடலில்; பிரதேச செயலர்கள், கரைச்சி பிரதேச சபை தலைவர் நா.வை.குகராசா, பிரதேச சபையின் செயலாளர் சி.கிருஸ்ணகுமார், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட அதிகாரி இ.செந்தூரன், மாவட்ட உளவள அலுவலர் தே.துஸ்யந்தன், மாவட்ட சிறுவர் நன்னடத்தை அலுவலர் சி.முத்துக்குமார், இணையச்சேவை நிலைய உரிமையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.a
கிளிநொச்சியில் இணையச்சேவை நிலையங்கள் மேற்பார்வை
Reviewed by NEWMANNAR
on
March 11, 2014
Rating:

No comments:
Post a Comment