அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்க தீர்மானத்தின் வலுத்தன்மை குறைக்கப்பட்டிருப்பது தமிழ் மக்களுக்கு அதிர்ச்சி தருகின்ற விடயம். ஆயர் இராயப்பு யோசப்.

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதியான விசாரணை ஒன்று மேற்கொள்வதன் மூலமே இலங்கையில் நல்லிணக்கத்தைக் கொண்டுவர முடியும் . எனவே தான் வெளிநாட்டு அமைப்புகளினதோ நாடுகளினதோ மேற்பார்வை இருக்க வேண்டுமென தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள் இலங்கையில் உள்ளக விசாரணை குறித்து கூறுவதற்கு அமெரிக்காவோ ஐநாவோ தேவையில்லை என மன்னார் ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை தெரிவித்தார் .

மேலும் ஐநா சபையின் மனித உரிமைகள் பேரவையில் மேற்கொள்ளப்படும் விசாரணை நம்பகத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் .

ஐநா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா முன்வைத்துள்ள வரைபு குறித்து கருத்து வெளியிட்ட போதே ஆயர் மேற்கண்டவாறு கூறினார் .

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் ,

நவநீதம்பிள்ளையின் அறிக்கையில் இலங்கை இழைத்த மனித உரிமை மீறல்களுக்கு ஒரு சர்வதேச விசாரணை கொண்டுவரப்பட வேண்டும் என சிபாரிசு செய்தது போலவே , அமெரிக்காவினால் கொண்டு வரப்படும் தீர்மானத்திலும் அது வலியுறுத்தப்படுமென உலகம் நம்பிக்கொண்டிருந்த வேளையில் , திடீரென அமெரிக்க தீர்மானத்தின் வலுத்தன்மை குறைக்கப்பட்டிருப்பது தமிழ் மக்களுக்கு அதிர்ச்சி தருகின்ற விடயமாக மாறியுள்ளது .

ஆனால் நவநீதம்பிள்ளை சமர்ப்பித்த அறிக்கையில் சர்வதேச விசாரணை ஒன்று போர்க்குற்றம் தொடர்பாகவும் ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் மேற்கொள்ளப்பட வேண்டுமென தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார் .

எனினும் அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணையில் அத்தகையதொரு சிபாரிசு இல்லாமலே போய்விட்டது .

ஆகவே இந்த விடயம் பெருத்த ஏமாற்றம் தரும் விடயமாக தமிழ் மக்களுக்கு ஆகிவிட்டது . காரணம் ஐநா மனித உரிமைகள் பேரவை எவ்வகை ஈடுபாட்டைச் செலுத்தி தனது அதிகார வரம்புக்குள் உண்மையைக் கண்டறிய விளையும் என்பதில் சந்தேகங்கள் நிலவலாம் .

அதேவேளை இலங்கை அரசை நீங்களே விசாரணை செய்யுங்கள் என சுதந்திரமாக விட்டால் அவர்கள் செய்த குற்றத்தை அவர்களே விசாரிப்பதானால் உண்மையும் கண்டறியப்பட மாட்டாது . நீதியும் கிடைக்காது .

இதுதான் இவ்வளவு காலமும் இலங்கையில் நடைபெற்ற விசாரணைகளாகும் . தங்கள் மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்களை தாங்களே விசாரணை நடத்துமாக இருந்தால் இலங்கையில் எந்தவித போர்க்குற்றமும் இழைக்கப்படவில்லை . எவ்வித மனித உரிமை மீறல்களும் இடம்பெறவில்லை என்றே கூறித் தாம் தப்பித்துக் கொண்டு விடுவார்கள் .

இப்படியான தீர்ப்பை வழங்குவதற்கு அமெரிக்காவோ அல்லது ஐநா சபையோ எமக்கு வேண்டியதில்லை .

எனவே மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதியான விசாரணை ஒன்று மேற்கொள்வதன் மூலமே இலங்கையில் நல்லிணக்கத்தைக் கொண்டுவர முடியும் .

எனவே தான் வெளிநாட்டு அமைப்புகளினதோ நாடுகளினதோ மேற்பார்வை இருக்க வேண்டுமென தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள் .
அமெரிக்க தீர்மானத்தின் வலுத்தன்மை குறைக்கப்பட்டிருப்பது தமிழ் மக்களுக்கு அதிர்ச்சி தருகின்ற விடயம். ஆயர் இராயப்பு யோசப். Reviewed by NEWMANNAR on March 09, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.