தாயின் வயிற்றிலிருந்து தூக்கியெறிப்பட்ட குழந்தை உயிர்பிழைத்த அதிசயம்: தாய், தந்தையும் பரிதாபமாக பலி
சீனாவில் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றிலிருந்து சாலையில் விழுந்த குழந்தை அதிஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளது. இதேவேளை தாயும் தந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
தெற்கு சீனாவின் பியூஜியான் மாகாணத்தில் உள்ள ஜியாமென் நகரத்தை சேர்ந்தவர் ஷாவோ, டியூவான் என்ற தம்பதி.
நிறைமாத கர்ப்பணியான டியூவானிற்கு மருத்துவ பரிசோதனைக்காக தன் கணவருடன் மோட்டார் வண்டியில் சென்றுள்ளார். இதன்போது இவர்களின் வண்டியின் மீது எதிர்பாராத விதமாக லொறி ஒன்று பயங்கரமாக மோதியதால் இருவரும் மோட்டார் வண்டியிலிருந்து தூக்கி வீசப்பட்டனர்.
தலை மற்றும் முதுகில் பலத்த காயத்துடன் உயிர்தப்பிய அக்குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குழந்தை நலனை கருத்தில் கொண்டு அதை காண வரும் ஏராளமான மக்கள் சிகிச்சைக்காக நிதி திரட்டி வருகின்றனர்.
தாயின் வயிற்றிலிருந்து தூக்கியெறிப்பட்ட குழந்தை உயிர்பிழைத்த அதிசயம்: தாய், தந்தையும் பரிதாபமாக பலி
Reviewed by NEWMANNAR
on
March 22, 2014
Rating:

No comments:
Post a Comment