கிளிநொச்சியை சேர்ந்த இளைஞன் மன்னாரில் கைது
மன்னாரில் கடல் தொழிலில் ஈடுபட்டு வந்த கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கடற்படையினர் நேற்று கைது செய்து தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக சோதனைகளும்,தேடுதல்களும் இடம் பெற்றும் வரும் நிலையிலே குறித்த இளைஞர் கிளிநொச்சியை சேர்ந்தவராக இருந்ததினாலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
குறித்த இளைஞர் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் தலைமன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சியை சேர்ந்த இளைஞன் மன்னாரில் கைது
Reviewed by NEWMANNAR
on
March 22, 2014
Rating:

No comments:
Post a Comment