'அவர்கள் அனைவரையும் கொன்றுவிட்டேன்": 3 மகள்மாரை கத்தியால் குத்தி படுகொலை செய்த தாய்
தனது 3 மகள்மாரையும் தாயொருவர் கொடூரமான முறையில் கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் இத்தாலியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
வட இத்தாலியிலுள்ள லெக்கோ நகரைச் சேர்ந்த எட்லிரா டொபுருசி ( 37 வயது) என்ற தாயே தனது அப்பாவி மகள்மாரான கிமோனா (13வயது), கேனி (10வயது) மற்றும் லின்ட்ஸோ (4வயது) ஆகிய மகள்மாரை கத்தியால் குத்தி கொடூரமாக படுகொலை செய்துள்ளார்.
இந்நிலையில் மேற்படி வீட்டிலிருந்து கூச்சல்களை கேட்ட அயலவர்கள் பொலிஸாருக்கு அழைப்பு விடுத்ததையடுத்து சம்பவ இடத்தை பொலிஸார் முற்றுகையிட்டனர்.
இதன்போது உடல் முழுவதும் இரத்தம் வழிந்தோட நின்றிருந்த எட்லிரா நான் அவர்கள் அனைவரையும் கொன்றுவிட்டேன் என கூச்சலிட்டுள்ளார்.
தனது கணவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்த எட்லிரா தனது 3 பிள்ளைகளது தந்தையான அவர் கடந்த வெள்ளிக்கிழமை தனது சொந்த நாடான அல்பேனியாவுக்கு புறப்பட்டு சென்றதையடுத்து கடும் மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தனது மகள்மாரை அவர்களது படுக்கை அறைகளில் வைத்து கத்தியால் குத்திக் கொண்ட எட்லிரா பின்னர் அவர்களது சடலங்களை படுக்கையறைக்கு இழுத்து வந்துள்ளார்.
பின் எட்லிரா தற்கொலை செய்துக்கொள்ளும் முகமாக தனது மணிக்கட்டிலும் கழுத்திலும் கத்தியால் வெட்டிக்கொண்ட போதும் அந்தக் காயங்கள் பாரதூரமானதாக இல்லாததால் அவர் உயிர் பிழைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த பெண்ணை கைது செய்துள்ள பொலிஸார் இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேற்படி படுகொலைகள் பிராந்திய மக்களிடையே பெரும் அதிர்ச்சியைத் தோற்றுவித்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
'அவர்கள் அனைவரையும் கொன்றுவிட்டேன்": 3 மகள்மாரை கத்தியால் குத்தி படுகொலை செய்த தாய்
Reviewed by NEWMANNAR
on
March 10, 2014
Rating:

No comments:
Post a Comment