29ம் திகதி சம்பளத்துடன் விடுமுறை
தேர்தல் நடைபெறவுள்ள மேல் மற்றும் தென் மாகாணங்களில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு எதிர்வரும் 29ம் திகதி சம்பளத்துடன் விடுமுறை வழங்கப்படும் என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன் அரச மற்றும் தனியார் துறையின் அதிகாரிகள் மாகாண சபைத் தேர்தல் சட்டத்திற்கு அமைய செயற்பட வேண்டும் என்றும் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
தேர்தலை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்திய செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள தேர்தல் திணைக்களம், தேர்தல் சட்டங்களை மீறும் செல்கள் அதிகரித்துள்ளதை காண முடிவதாகவும் கூறியுள்ளது.
மார்ச் 10ம் திகதி வரை தேர்தல் சம்பந்தமான 654 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன் அவற்றில் 625 முறைப்பாடுகள் தேர்தல் சட்டங்களை மீறியது எனவும் 29 முறைப்பாடுகள் தேர்தல் வன்முறை சம்பந்தமானது எனவும் கபே அமைப்பு தெரிவித்துள்ளது.
29ம் திகதி சம்பளத்துடன் விடுமுறை
Reviewed by NEWMANNAR
on
March 10, 2014
Rating:

No comments:
Post a Comment