மனித உரிமைகள் தொடர்பில் பாடப் புத்தகம் விநியோகம்
மனித உரிமைகள் தொடர்பில் பாடப் புத்தகங்களை அச்சிட்டு பாடசாலைகளுக்கு விநியோகம் செய்ய இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.மேலதிக வாசிப்புப் புத்தகமாக இது வெளியிடப்பட உள்ளது.
மனித உரிமை தொடர்பிலான இந்த பாடப் புத்தகங்கள் சகல பாடசாலைகளுக்கும் விநியோகம் செய்யப்பட உள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளரது ஆலோசனைக்கு அமைய நியமிக்கப்பட்ட குழுவொன்றினால் இந்த நூல் எழுதப்பட உள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பிரதி துணை வேந்தர் பேராசிரியர் பிரேமகுமார டி சில்வா உள்ளிட்ட புத்திஜீவிகளினால் இந்த நூல் எழுதப்பட உள்ளது.
தரம் ஐந்துக்கு மேல் கல்வி பயிலும் மாணவ மாணவியருக்கு இந்தப் புத்தகம் வழங்கப்பட உள்ளது.
எதிர்காலத்தில் ஆரம்ப பாடசாலை மாணவ மாணவியருக்கும் மனித உரிமைகள் குறித்த புத்தகமொன்றை விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் தொடர்பில் பாடப் புத்தகம் விநியோகம்
Reviewed by NEWMANNAR
on
March 06, 2014
Rating:

No comments:
Post a Comment