அண்மைய செய்திகள்

recent
-

செயற்கை இதயம் பொருத்தப்பட்ட முதல் மனிதன் மரணம்

இருதய நோயினால் பாதிக்கப்படுபவர்களுக்கு மூளைச்சாவு ஏற்பட்ட வர்களிடம் இருந்து தானமாக பெறப்பட்டு இருதயம் பொருத்தப்பட்டு வருகிறது.
அது போன்று இருதயம் கிடைக்க நீண்ட நாள் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் பலர் உயிரிழக்க நேரிடுகிறது.

அதை தடுக்க செயற்கை இருதயம் தயாரித்து அதை பொருத்தும் பணியில் பிரான்ஸ் பயோமெடிக்கல் நிறுவனமான கார்மேட் ஈடுபட்டுள்ளது.

அந்த நிறுவனம் தயாரித்த முதல் செயற்கை இருதயம் 76 வயது இருதய நோயாளி ஒருவருக்கு கடந்த டிசம்பர் 18ம் திகதி பொருத்தப்பட்டு சிறந்த முறையில் இயங்கியது.

எனவே அவர் வைத்தியசாலையிருந்து விடைபெற்றுச் சென்னார். இந்த நிலையில் கடந்த 2ம் திகதி அவரது செயற்கை இருதயம் செயல்பாட்டை நிறுத்தியது. இதனால் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார்.

இவருக்கு பொருத்தப்பட்ட செயற்கை இருதயம் 75 நாட்கள் மட்டுமே இயங்கி உள்ளது. பொதுவாக இது போன்ற இருதயங்களை குறுகிய காலத்துக்கு மட்டுமே பயன்படுத்தி வந்தனர்.

கார்மேட் நிறுவனம் அதை நவீன மயமாக்கி நீண்ட நாட்கள் இயக்கும் வகையில் வடிவமைத்து இருந்தது.
செயற்கை இதயம் பொருத்தப்பட்ட முதல் மனிதன் மரணம் Reviewed by NEWMANNAR on March 06, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.