கொழும்பு கல்விச் சமூகத்தால் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு பாராட்டு!
கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு கொழும்பில் நாளை மாபெரும் கௌரவிப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
கொழும்பின் பழைமை வாய்ந்த பாடசாலைகளில் ஒன்றான அல் ஹிஜ்ரா முஸ்லிம் வித்தியாலயத்தின் கல்விச் சமூகம் இப்பாராட்டு விழாவை நடத்துகின்றது.
பாடசாலையின் 95 ஆவது ஆண்டு நிறைவு விழாவோடு ஒட்டியதாக இக்கௌரவிப்பு விழா நடத்தப்படுகின்றது.
ஜோர்தானில் அம்மானில் உள்ள றோயல் இஸ்லாமிய தந்திரோபாய நிலையத்தால் உலகின் செல்வாக்கு மிக்க 500 முஸ்லிம் பிரமுகர்களில் ஒருவராக அமைச்சர் ரிசாத் பதியுதீன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு கல்விச் சமூகத்தால் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு பாராட்டு!
Reviewed by Admin
on
March 15, 2014
Rating:

No comments:
Post a Comment