அண்மைய செய்திகள்

recent
-

விமானத்தை கண்டுபிடிக்க மந்திரவாதியின் உதவியை நாடிய மலேசியா: இன்னமும் பறந்துகொண்டிருப்பதாக மந்திரவாதியும் அமெரிக்காவும் தகவல் - காணொளி இணைப்பு

இந்து சமுத்திரத்தில் தேடுதல்  நடவடிக்கை

காணாமல் போன மலேசிய எயார்லைன்ஸ் விமானத்தை தேடும் நடவடிக்கையை இந்து சமுத்திரத்தில் முன்னெடுக்க அமெரிக்க கடற்படை தனது கப்பலொன்றுக்கு  உத்தரவிட்டுள்ளது. 

மேற்படி  விமானம்  ராடர்  கருவிகளிலிருந்து  மறைந்த தற்கு  பின் பல  மணித்தியாலங்களாக மேற்படி விமானம்  அது தொடர்பிலிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் சமிக்ஞை ஒன்றை செய்மதியொன்றுக்கு அனுப்பி வைத்திருந்ததாக கிடைக்கப்பெற்ற தகவலை  அடிப்படையாக வைத்தே மேற்படி  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
தொடர்ந்து பறந்து  கொண்டிருக்க வாய்ப்பு

மலேசிய எயார்லைன்ஸ் எம்எச் 370  விமானம் செய்மதிக்கு தரவுகளை அனுப்பாத  போதும் சமிக்ஞைகளை அனுப்பியிருப்பது  உண்மையாயின்  அந்த  விமானம்  காணாமல்  போன பின்னரும் தொடர்ந்து பறந்து  கொண்டிருக்க வாய்ப்புள்ளதாக ஊகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

இது தொடர்பில் அமெரிக்க வெள்ளை மாளிகை பேச்சாளர் ஜெகார்னி  விபரிக்கையில் புதிய விசாரணைகளின் பிரகாரம் தேடுதல் நடவடிக்கை விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக கூறினார். 

புதிய தகவல்களின்  பிரகாரம் இந்து சமுத்திரத்தில்  புதிய  தேடுதல்  நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது  என அவர்  தெரிவித்தார். 

அதே சமயம்  அமெரிக்க கடற்படையானது  தனது  நாசகார   கப்பலான யு.எஸ்.எஸ். கிட்டை தாய்லாந்து வளைகுடாவிலான தனது தேடுதல் நிலையிலிருந்து மலேசிய மேற்கு  கடற்கரைக்கு நகர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது. 

இந்நிலையில் மலேசிய அரசாங்கத்தின்  வேண்டுகோளொன்றையடுத்து அந்நாட்டுக்கு தேடுதல்  நடவடிக்கையில்  உதவும் பணியில்  இந்திய கடற்படை  விமானப்படை மற்றும் கரையோர காவல்படை என்பன இணைந்துள்ளன. 

விமானம்  காணாமல்  போனதற்கு பின்  பல  மணித்தியாலங்களாக  அதன் இயந்திரங்களிலிருந்து  தரவுகள்  அனுப்பப்பட்டுள்ளதாக ஏற்கனவே அமெரிக்க  வோல் ஸ்றீட்  ஜோன்   ஊடகம்  செய்தி  வெளியிட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது. 


காணாமல் போய் 4 மணித்தியாலமாக செய்மதியொன்றுக்கு சமிக்ஞை

அத்துடன்  மேற்படி  போயிங்  777-  200  விமானத்தின்  இயந்திர முறைமைகளும்  விமானம்  காணாமல் போனதற்கு பின்  4 மணித்தியாலமாக செய்மதியொன்றுக்கு சமிக்ஞைகளை வழங்கியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் ஏபி ஊடகத்துக்கு  அளித்த பேட்டியில்  தெரிவித்துள்ளனர். 

போயிங்  இயந்திரங்களானது  பறக்கும் போது  விமானம்  எவ்வாறு செயற்படுகிறது என்பது தொடர்பில் செய்மதிக்கு தரவுகளை அனுப்பி வைக்கக்கூடியதாகும். இந்நிலையில் மேற்படி விமானம் காணாமல் போன பிற்பாடும் செய்மதிக்கு விமானம் இயங்கிக்கொண்டிருப்பதற்கான சமிக்ஞைகளை அனுப்பிய வண்ணம் உள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இதன் பிரகாரம் விமானம் இறுதியாக ராடர் கருவியிலிருந்து மறைந்த பின்னர் மேலும் 1600 கிலோ மீற்றருக்கும் அதிகமான தூரம்  பறந்துள்ளதாக அதிகாரிகள் நம்புகின்றனர். ஏனெனில் அந்த விமானம்  காணாமல் போன பிற்பாடு சுமார்  4 மணித்தியாலங்களுக்கு பறப்பதற்கு தேவையான எரிபொருளை கொண்டிருந்துள்ளது. 

இந்நிலையில்  இரு பெயரை  வெளியிட விரும்பாத  அமெரிக்க அதிகாரிகள் ஏ பி சி  செய்தி சேவைக்கு அளித்த பேட்டியில் விமானத்திலிருந்த இரு தொலைத்தொடர்பாடல்  முறைமைகளும்  தரவுகளை பரிமாறிக் கொள்வதை வௌ;வேறு நேரத்தில் நிறுத்தியுள்ளதாகவும் இது  அந்த விமானம் இயந்திரங்கள் செயலிழப்புக்குள்ளாகி பெரும் அனர்த்தத்தை சந்தித்திருக்கவில்லை என்பதனை சுட்டிக்காட்டுவதாக உள்ளதெனவும்  தெரிவித்துள்ளனர். 


மந்திரவாதியின் உதவியை நாடியது மலேசியா

மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடிக்கமந்திரவாதியின்  உதவியை நாடியுள்ளது மலேசியா.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து பீஜிங் சென்ற விமானம் கடந்த 7அம் திகதி நள்ளிரவு காணாமல் போனது.

இதுவரையில் எவ்வித தடயங்களும் கிடைக்கப்பெறவில்லை, 239 பேர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை.

இந்நிலையில் மலேசியா, விமானத்தை கண்டுபிடிக்க பிரபல மந்திரவாதியான இப்ராஹிம் மத் ஜின் என்பவரின் உதவியை நாடியுள்ளது.

அந்த நபர் விமானம் கிளம்பிய கோலாலம்பூர் விமான நிலையத்தில் பூஜை நடத்தியுள்ளார். அவரை இந்த பூஜையை செய்ய நாட்டின் முக்கிய தலைவர்கள் தான் அழைத்ததாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர் ஒரு கையில் மீன் வலையையும், மறுகையில் மூங்கில் பைனாகுலரையும் வைத்து விமானத்தை தேடியுள்ளார்.





விமானம் தற்போதும் பறந்து கொண்டிருக்கிறது

விமானம் பற்றி அந்த சூனியக்காரர் கூறுகையில், விமானம் தற்போதும் பறந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன், இல்லை என்றால் கடலில் விழுந்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே மாயமான மலேசிய விமானம் ரேடார் தொடர்பை இழந்த பின்னும் நான்கு மணி நேரங்கள் தாழ்வானபகுதியில் வானில் பறந்துள்ளது என்று அமெரிக்க விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர் என்று அந்நாட்டு வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை தகவல் தெரிவித்துள்ளது.
மாயமான விமானத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்களை கொண்டு இந்த சந்தேகம் எழுந்துள்ளது. விமான கன்ட்ரோல் அறைக்கு தன்னிச்சையாக தகவல்களை அனுப்பும் விமானத்தின் கருவியின் தகவல்களை கொண்டு இந்த சந்தேகம் எழுந்துள்ளது.

இதனால் விமானம் கடத்தி மறைத்து வைக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.



செயற்கைகோள் படங்கள்! மலேசியா நிராகரிப்பு

239 பேருடன் நடுவானில் பறந்து கொண்டிருந்த சமயம், காணாமல் போன விமானம் பற்றிய புதிய தகவல்களை மலேசிய அரசாங்கம் நிராகரித்துள்ளது.
காணமல் போன மலேசிய விமானத்தின் சிதைவுகளாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் சீனா மூன்று புகைப்படங்களை வெளியிட்டிருந்தது.

அத்துடன், கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்த பின்னரும் விமானம் நான்கு மணித்தியாலங்கள் பறந்ததாகத் தெரிகிறதென அமெரிக்க பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இவையிரண்டும் தவறானவையென மலேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹிஷாமுதீன் ஹ_சைன் தெரிவித்தார்.

சீனா தவறுதலாக படங்களை வெளியிட்டுள்ளதென அவர் குறிப்பிட்டார். விமானத்தின் எஞ்சினை உற்பத்தி செய்த ரோல்ஸ் ரொய்ஸ் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டபோது, அமெரிக்காவின் தகவல் தவறானதென தெரியவந்ததாக அவர் கூறினார்.
விமானத்தை கண்டுபிடிக்க மந்திரவாதியின் உதவியை நாடிய மலேசியா: இன்னமும் பறந்துகொண்டிருப்பதாக மந்திரவாதியும் அமெரிக்காவும் தகவல் - காணொளி இணைப்பு Reviewed by NEWMANNAR on March 15, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.