மலேசிய விமானம் திட்டமிட்ட வகையில் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது -மலேஷியப் பிரதமர்
காணாமல் போனதாக கூறப்படும் மலேஷிய பயணிகள் விமானத்தின் கட்டமைப்பு திட்டமிட்ட வகையில் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக மலேஷியப் பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார்.
செய்மதி மற்றும் ராடர் கட்டமைப்புக்களில் பதிவான தரவுகளின் பிரகாரம் விமானத்திலுள்ள ஒருவரால் திட்டமிட்ட வகையில் இந்த செயற்பாடு மேற்கொள்ளப்பட்டமைக்கான உறுதியான புதிய ஆதாரம் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதன்மூலம் விமானம் காணாமல் போனமை தொடர்பான விசாரணை புதிய கோணத்தை எட்டியுள்ளதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் மலேஷியப் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்பிரகாரம் விமானத்திலிருந்த பணியாளர்கள் மற்றும் பயணிகள் குறித்து இந்த விசாரணைகளில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதாகவும் நஜீப் ரசாக் குறிப்பிட்டுள்ளார்.
எம் ஏச் 370 என்ற குறித்த விமானம் 239 பேருடன் கடந்த சனிக்கிழமை காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த விமானத்தை தேடும் பணிகள் பன்நாட்டு ஒத்துழைப்புடன் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மலேசிய விமானம் திட்டமிட்ட வகையில் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது -மலேஷியப் பிரதமர்
Reviewed by NEWMANNAR
on
March 15, 2014
Rating:

No comments:
Post a Comment