சிறந்த முறையில் செயற்படும் முசலி இணக்க சபை
இந்த நாட்டில் ஏற்பட்ட யுத்ததின் காரணமான முசலி மக்கள் தங்களின் சொத்துக்களை விட்டு அனாதைகளாக இருக்க இடம் இன்றி அல்லல்பட்டு வாழ்ந்த வேளையில் அமைச்சர் றிசாட் பதீயுதின் அயராத உழைப்பினால் முசலி மக்கள் மீண்டும் மீள்குடியேறினார்கள்.
அதன் பின்பு இவர்களுக்கு அதிகமான பிரச்சினைக்கு முகம் கொடுக்க நிதி மன்றங்களுக்கு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்ட போது கடந்த 2013 ஆண்டு நீதி அமைச்சினால் உரியவர்கள் நியமிக்கபட்டனர்.
தலைவராக பேராதனை பல்கலைகழகத்தின் பட்டதாரியும் முசலி பிரதேச செயலகத்தில் பணியாற்றும் பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகதர்களுக்கான இணைப்பாளரும் அகில இலங்கை சமாதான நீதவனுமான றாபி (மௌவி) நியமிக்கபட்டார் இவரின் வழிகாட்டலின் கிழ் இது வரைக்கும 50 மேல் பட்ட பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இணக்க சபை இல்லை என்றால் மக்கள் நாளாந்தம் பல இடங்களுக்கு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கும் எனவும் பிரச்சினை உடன் வருகின்றவர்களுக்கு இனம்,மதம், பிரதேசவாதம்,கட்சி பாராமல் சபை செயற்படுவதாக தெரிவித்தார்.
வாஜித் சாகுல் ஹமிது
சிறந்த முறையில் செயற்படும் முசலி இணக்க சபை
Reviewed by NEWMANNAR
on
March 03, 2014
Rating:

No comments:
Post a Comment