இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் சிரேஸ்ர விளையாட்டு வீரர்களுக்கு இடையிலான போட்டி
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் சிரேஸ்ர விளையாட்டு வீரர்களுக்கு இடையிலான போட்டி இன்று மாலை 3 மணியளவில் தாழ்வுபாடு பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
குறித்த போட்டியினை பிரபல சமூக சேவகர் சாள்ஸ் நிமலநாதன் வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
குறித்த போட்டியினை பிரபல சமூக சேவகர் சாள்ஸ் நிமலநாதன் வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
குறித்த போட்டிகளின்போது மன்னார் மாவட்ட மெய்வல்லுனர் சங்க செயலாளர் ஞானராஜ் மற்றும் மாவட்ட உதைபந்தாட்ட தலைவர் ஞானபிரகாசம் ஜெரால்ட் உட்பட கடற்படை அதிகாரிகள் மற்றும் உதைபந்தாட்ட லீக்கின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இலங்கை கடற்படையும் மன்னார் மாவட்ட லீக் அணியும் குறித்த போட்டியின் போது ஒன்றுன்கொன்று எதிர்த்து விளையாடியிருந்தன
பெரும் எண்ணிக்கையிலான மக்கள் குறித்த போட்டிகளை பார்வையிட மாவட்டத்தின் பல பாகங்களிலுமிருந்து வருகைதந்திருந்தனர்.
பெரும் எண்ணிக்கையிலான மக்கள் குறித்த போட்டிகளை பார்வையிட மாவட்டத்தின் பல பாகங்களிலுமிருந்து வருகைதந்திருந்தனர்.
போட்டியின் ஆரம்பம் முதல் முடிவுவரை இரு அணிகளும் விறுவிறுப்பாக ஒன்றை ஒன்று எதிர்த்து விளையாடியிருந்தன.
குறித்த போட்டிகளின் போது கடற்படை அணி 2-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.
வெற்றியீட்டிய அணிகளுக்கான வெற்றிக்கிண்னத்தை அதிதிகள் வழங்கிவைத்தனர்
குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் பல்துறைசார் முன்னேற்றங்களுக்கு பாரிய அளவிலான சமூக சேவையினை சமூக சேவகர் சாள்ஸ் நிமலநாதன் ஆற்றிவருவது குறிப்பிடத்தக்கது.
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் சிரேஸ்ர விளையாட்டு வீரர்களுக்கு இடையிலான போட்டி
Reviewed by Author
on
March 03, 2014
Rating:

No comments:
Post a Comment