இலங்கை கடற்படையின் தாக்குதலில் எந்தவொரு தமிழக மீனவருக்கும் பாதிப்பில்லை
இலங்கை கற்படையின் தாக்குதலால் காயமடைந்த அல்லது உயிரிழந்த எந்தவொரு மீனவரும் இதுவரை பதிவாகவில்லை என தமிழக கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் சட்டத்தின்கீழ் சமர்ப்பித்த விண்ணப்பத்திற்கு பதிலளிக்கும் வகையில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் காயமடைந்த, உயிரிழந்த மீனவர்கள் தொடர்பான தகவல் தமது கட்டுப்பாட்டிலுள்ள எந்தவொரு மீனவ கிராமத்திலிருந்தும் கிடைக்கவில்லை என தமிழக கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை கடற்படையின் தாக்குதலில் எந்தவொரு தமிழக மீனவருக்கும் பாதிப்பில்லை
Reviewed by NEWMANNAR
on
March 31, 2014
Rating:

No comments:
Post a Comment