அண்மைய செய்திகள்

recent
-

விபத்துக்குள்ளாகி தீப்பிளம்பாக எரிந்த ஹெலிக்கொப்டர்-படங்கள்

அமெரிக்க வொஷிங்டன் நகரிலுள்ள சியட்டில் நகரில் ஹெலிக்கொப்டர் ஒன்று செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளாகி தீப்பிளம்பாக எரிந்ததில் அதில் பயணம் செய்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த விபத்தில் தீக்கிரையான காரொன்றிலிருந்த நபரொருவர் பெரும் போராட்டத்தின் மத்தியில் சுயமாக வெளியேறி உயிர் தப்பியுள்ளார். எனினும், அவரது உடலில் 50 சதவீதத்துக்கும் அதிகமான பகுதி கடும் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளது.

ஹெலிக்கொப்டர்  புறப்பட ஆயத்தமானபோதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
ஒலிபரப்பு நிறுவனமான கொமோவுக்குச் சொந்தமான அந்த ஹெலிக்கொப்டர்   அந்த நிறுவனத்தின் கலைக் கூடத்துக்கு வெளியே விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்துள்ளது.
அந்த ஹெலிக்கொப்டரில் பயணம் செய்த அதன் விமானியான காரி பிபிஸனரும் புகைப்படக் கலைஞரான பில் ஸ்ரோத்மானும் உயிரிழந்துள்ளனர். 






விபத்துக்குள்ளாகி தீப்பிளம்பாக எரிந்த ஹெலிக்கொப்டர்-படங்கள் Reviewed by NEWMANNAR on March 20, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.