ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் நிலை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்! - ஹுனைஸ் பாரூக்
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் கடந்த 22ம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்பித்த தனி நபர் பிரேரணை தொடர்பில் விவாதத்தில் கலந்து கொண்டு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் உரையாற்றினார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது சபைக்கு குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரக்குமார் தலைமை தாங்கினார். அங்கு தொடர்ந்;து தமதுரையில் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்ததாவது,
மனித உரிமையும், அடிப்படை உரிமைகளும், வாழ்வுரிமைகளும் மீரப்பட்ட ஒருவன் என்ற வகையில் இந்த பிரேரணை மீது உரையாற்றுவது பொருத்தம் என நிணைக்கின்றேன்.'
14வது அரசியல் உறுப்புரிமை செல்வது எல்லோருக்கும் வாழும் உரிமை இருக்கின்றது என்று ஆனால் இந்த நாட்டில் வடக்கில் வாழ்ந்த தமிழ் பேசும் மக்களுக்கான அடிப்படை உரிமை மீரப்பட்டடுள்ளது. 1990ஆம் ஆண்டு வடபுலத்தில் இருந்து வெளியேற்றப் பட்ட ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் நிலை தொடர்பில் இங்கு கவனம் செலுத்த வேண்டும். வடபுலத்தில் முஸ்லிம்களின் அனைத்து பள்ளிவாசல்களும் அழிக்கப் பட்டன, கல்வி, பொருளாதாரம், கலாச்சாரம் என்பன இதன் மூலம் பறிக்கப் பட்டன.
இந்த அடிப்டை உரிமை மீரியவர்கள் தொடர்பில் சர்வதேசம் எதுவும் பேசுவதில்லை. அது மட்டுமல்லாமல் இலங்கையில் வாழுபவர்களும் பேசுவதில்லை, ஜெனீவா மானாட்டில் பேச வேண்டும் என சொல்பவர்கள் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், அதனை செய்தவர்கள் தொடர்பில் கேள்விகளை கேட்க வேண்டும். அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த இராஜங்க தூதுவர் ஒருவரை சந்தித்து கலந்துரையாடிய போது அவர் முஸ்லிம்களை மறந்த நிலையில் போசினார். நான் அவருக்கு முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பிலும், முஸ்லீம்கள் இழந்துள்ள துறைகள் பற்றியும் விளக்கப் படுத்தினேன்.
வருடத்திற்கு 3 பேர் வீதம் இந்த 23 வருடத்திற்குள் 69 பேர் சட்டத்துறையில், 69 பேர் உயர் பதவிகளில் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு கல்வி உரிமை மறுக்கப் பட்டது, பொருளாதாரம் என்பது முற்று முழுதாக அழிக்கப்பட்டது, தமது பொருளாதாரத்தை அவர்கள் பூச்சியத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டிய துரதிஷ;ட நிலைக்குத் தள்ளப் பட்டார்கள், தேவையான நிலங்கள் தொடர்பில் பிரச்சினைகள் காணப்டுகின்றது.
வடமாகாண சபையின் அதிகாரத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. இவர்களது இந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கான நியாயம் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். அது அவர்களது தார்மீகப் பொறுப்பாகும், மனித உரிமை தொடர்பில் இவர்கள் பேசுகின்ற போது வடக்கில் சிறுபான்மையாக இருக்கும் முஸ்லிம்கள் தெடர்பில் பேச வேண்டும். இதனை மறந்து அவர்கள் செயற்பட முடியாது. தமிழ் பேசும் மக்மள் வடக்கில் மிகவும் நெருக்கத்துடன் வாழ்ந்தார்கள் என்பதை யாவரும் அறிவார்கள். வடக்கில் பெறும்பான்மையாக வாழும் தமிழ் சமூகம் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் விடயத்தில் கவளம் செழுத்த வேண்டும்.
பலவந்தமாக முஸ்லிம்கள் வெளியேற்றப் பட்டதால்இழந்த வற்றினை மதிப்பீடு செய்து அவர்களது வாழ்வாதார உரிமையினை வழங்க வேண்டும், அதே வேளை இந்த முஸ்லிம்களுக்காக விNஷட ஆணைக்குழுவொன்றை அமைத்து பாதிப்புகள் தொடர்பில் உரிய நஷ;டயீடுகள் வழங்கப் பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத் தரணி ஹுனைஸ் பாரூக் கடந்த 22ம் திகதி பாரளுமன்றத்தில் உரையாற்றினார்.
எஸ்.எச்.எம்.வாஜித்
ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் நிலை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்! - ஹுனைஸ் பாரூக்
Reviewed by NEWMANNAR
on
March 12, 2014
Rating:

No comments:
Post a Comment