‘ஆரோக்கியமான புன்னகையை அனுபவிப்போம்’; வாய் சுகாதார தினம் இன்று
சர்வதேச வாய் சுகாதார தினம் இன்றாகும்.
“ஆரோக்கியமான புன்னகையை அனுபவிப்போம்” என்பதே இம்முறை வாய் சுகாதார தினத்தின் தொனிப்பொருளாகும்.
எவ்வாறாயினும், நாட்டிலுள்ள சிறார்களில் 50 வீதமானவர்கள் பற்கள் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பற் சுகாதாரம் தொடர்பான பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜயசுந்தர பண்டார தெரிவித்தார்.
பற் சுகாதாரத்தை பேணுவது மிகவும் முக்கியமானது என அவர் சுட்டிக்காட்டினார்.
சிறுவயதில் பற்களை சுகாதார முறையில் பேணாத விடத்து, 35 வயதாகும் போது, ஒருவருக்கு சுமார் 09 பற்கள் சேதமடைவதாக டொக்டர் ஜயசுந்தர பண்டார தெரிவித்தார்.
நாட்டில் 65 வயதிற்கு மேற்பட்டவர்களில், பற்கள் அனைத்தும் இல்லாதவர்கள் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.
எனவே சிறுவயது முதல் பற்களை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் பேணுவது முக்கியத்துவம் வாய்ந்தது என சுகாதார அமைச்சின் பற் சுகாதாரம் தொடர்பான பிரதிப் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.
‘ஆரோக்கியமான புன்னகையை அனுபவிப்போம்’; வாய் சுகாதார தினம் இன்று
Reviewed by NEWMANNAR
on
March 20, 2014
Rating:

No comments:
Post a Comment