அண்மைய செய்திகள்

recent
-

யுவதி மீது மூன்று இளைஞர்கள் பாலியல் துஷ்பிரயோகம்: ஒருவர் கைது

யாழ். துன்னாலை பகுதியிலுள்ள யாக்கரை மயானத்தில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை 7 ஆம் திகதி 19 வயது  இளம்யுவதியொருவரை 3 இளைஞர்கள்இணைந்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவம் தொடர்பில் பாலச்சந்திரன் பிரபாகரன் (வயது-28) என்ற நபரை கைதுசெய்துள்ளாக நெல்லியடிப் பொலிஸர் தெரிவித்தனர்.



தென்மராட்சி வரணி இடைக்குறிஞ்சியை சேர்ந்த மேற்படி பெண் அதேயிடத்தினைச் சேர்ந்த இளைஞனுடன் வடமராட்சி வல்லிபுரம் ஆழ்வார் ஆலயத்திற்குச் சென்று வழிபாடுகளை முடித்துவிட்டு திரும்பியுள்ளார்.

இதன்போது வழியில் இவர்களை வழிமறித்த 3 பேர் குறித்த இளைஞனைத் தாக்கிவிட்டு யுவதியை யாக்கரை மயானத்தில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர்.

பின்னர் மூவரும் சென்றபின்னர் குறித்த இளைஞன் நெல்லியடிப் பொலிஸாரிற்கு தொலைபேசியில் தகவல் வழங்க அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் யுவதியையும் இளைஞனையும் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

அத்துடன், பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியர்வர்களில் ஒருவரின் கைப்பையினை (பேர்ஸ்) கைப்பற்றிய பொலிஸார் அதனை வைத்து பாலச்சந்திரன் பிரபாகரன் என்ற நபரை தேடிவந்தனர்.

இந்நிலையில்  மேற்படி நபர் தனது குடும்பத்துடன், வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது அப்பகுதி பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் துன்னாலை யாக்கரைப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இந்நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய இருவரையும் தேடி வருகின்றனர்.
யுவதி மீது மூன்று இளைஞர்கள் பாலியல் துஷ்பிரயோகம்: ஒருவர் கைது Reviewed by NEWMANNAR on March 14, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.