அண்மைய செய்திகள்

recent
-

அரளி விதையை உட்கொண்ட காதலர்கள்! யுவதி மரணம்! இளைஞன் ஆபத்தான நிலையில்..!

அரளி விதையை சாப்பிட்ட காதலர்கள் ஆபத்தான நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதன்போது  14 வயதான இளம் யுவதி உயிரிழந்துள்ளதுடன், 17 வயதான இளைஞன் ஆபத்தான நிலையில், அனுராதபுரம் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புத்தளம் அட்டவில்லு பிரதேசத்தை சேர்ந்த 14 வயதான ஜே.ஏ. நிஸன்சலா சந்தமாலி என்ற பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பாடசாலை மாணவி , 17 வயதான இளைஞரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் அண்மையில் ஒருநாள் வெளியில் சென்றிருந்தனர்.

இதனையறிந்த மாணவியின் பெற்றோர் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்ததுடன், மாணவியை மீண்டும் வீட்டுக்குள் சேர்த்து கொள்ள போவதில்லை எனக் கூறியுள்ளனர்.

பெற்றோரின் எதிர்ப்பு காரணமாக மனவேதனையில் இருந்த மாணவி, நேற்று அட்டவில்லு குளத்திற்கு அருகில் காதலனுடன் இணைந்து அரளி விதையை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர்.

ஆபத்தான நிலையில் இருந்த இவர்களை அயலவர்கள் புத்தளம் வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

ஆபத்தான நிலையில் இருந்த காதலன் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன் மாணவி புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மாணவி இன்று காலை உயிரிழந்துள்ளார்.

மரணத்திற்கு பின்னரான விசாரணைகள் இன்று நடைபெறவுள்ளது. புத்தளம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
அரளி விதையை உட்கொண்ட காதலர்கள்! யுவதி மரணம்! இளைஞன் ஆபத்தான நிலையில்..! Reviewed by NEWMANNAR on March 06, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.