சிவில் பாதுகாப்புக் குழுவினைப் பலப்படுத்தல் தொடர்பான கூட்டம்
முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குள் அமைந்திருக்கும் 7 பொலிஸ் நிலையங்களில் சிவில் பாதுகாப்புக் குழுக்களினைப் பலப்படுத்தல் தொடர்பான கூட்டம் நேற்று துணுக்காய் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
மாங்குளம் பிராந்தி பொலிஸ் பொறுப்பதிகாரி ஐ.டி.றொகான் விஜயசிங்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர கருத்துரைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் சிவில் பாதுகாப்புக் குழுகள் எவ்வாறு இருக்கவேண்டும், சிவில் பாதுகாப்புக் குழு சட்டத்தினை கையில் எடுக்கமுடியாது, ஒவ்வொரு பிரதேசத்தில் இடம்பெறும் குற்றங்களை தடுக்களும் மற்றும் கட்டுப்படுத்தும் சக்தியாகச் செயற்படவேண்டும், பலம் வாய்ந்த அமைப்பாக எவ்வாறு செயற்படமுடியும் போன்ற விடயங்கள் பற்றி பூஜித ஜெயசுந்தரவினால் விளக்கமளிக்கப்பட்டன.
அத்துடன், சிவில் பாதுகாப்புக் குழுவில் இருப்பவர்கள் குற்றங்கள் செய்தலோ அல்லது அதுனுடன் தொடர்பட்டதாகவோ இருக்கக்கூடாது என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
இந்நிகழ்வில் துணுக்காய் பிரதேச செயலர் எஸ்.குணபாலன், மாந்தை கிழக்குப் பிரதேச செயலர் ரி.பிருந்தாகரன், கிராமஅலுவலர்கள், பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சிவில் பாதுகாப்புக் குழுவினைப் பலப்படுத்தல் தொடர்பான கூட்டம்
Reviewed by NEWMANNAR
on
March 09, 2014
Rating:
No comments:
Post a Comment