வவுனியாவில் பார்த்தீனியம் அகற்றும் பணி
வவுனியா பொலிஸாரும் பாடசாலை மாணவர்களும் இணைந்து வவுனியாவில் பார்த்தீனியத்தை (களை) அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திற்கு முன்னாள் இடம்பெற்ற இந் நிகழ்வில் வவுனியா பொலிஸார், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினர், பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டு வவுனியா நகர்ப்பகுதி எங்கும் பாத்தீனியத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
முழு நாள் வேலைத்திட்டமாக இடம்பெற்ற இப் பணியில் பாத்தீனியத்தினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான விழிப்புணர்வு பிரசுரங்களையும் மக்களுக்கு வழங்கியிருந்தனர்.
இதேவேளை வட மாகாண விவசாய அமைச்சினால் பார்த்தீனியம் களை அகற்றும் நிகழ்ச்சி திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
வவுனியாவில் பார்த்தீனியம் அகற்றும் பணி
Reviewed by NEWMANNAR
on
March 09, 2014
Rating:
No comments:
Post a Comment