அண்மைய செய்திகள்

recent
-

காணமல்போன மலேஷிய விமானத்தை தேடும் பணிகள் தீவிரம்

239 பயணிகளுடன் பயணித்த மலேசிய விமானம் காணாமற் சென்று 24 மணித்தியாலங்கள் கடந்துள்ள நிலையில் விமானத்தை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கோலாலம்பூரில் இருந்து புறப்பட்ட 2 மணித்தியாலங்களில்  காணாமற்  போன  விமானம்,  வியட்னாமின் பூகோக் தீவிற்கு 153 கடல்மைல்கள் தொலைவில்  கடலில் வீழ்ந்ததாக  அந்த நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.

இந்நிலையில் விமானம் வீழ்ந்ததாக சந்தேகிக்கப்படும் கடற்பிராந்தியத்தின் இரண்டு பகுதிகளில்  எண்ணெய் படலங்கள் காணப்படுவதாக வியட்னாம் செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும்  காணாமற்போன எம். எச் 370 ஆம் இலக்க போயிங் 777 -200 விமானத்தின் எரிபொருளா என்பது குறித்து பரிசோதனைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து  சிங்கப்பூர் , வியட்னாம் , மாலைத்தீவு நாடுகளுடன் அமெரிக்காவும் இணைந்து இந்த தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

விமானத்தில் பயணித்த 227 பயணிகளில் மூன்றில் இரண்டு வீதமானோர் சீனப் பிரஜைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில் விமானத்தில் பயணித்தவர்களின் தகவல்களை சமர்ப்பிக்குமாறு மலேசிய விமான நிலையம் மக்களை அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை குறித்த விமானம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படாத நிலையில் இந்த விமானம் தரையிறங்குவதில் கால தாமதம் நிலவுவதாக பீஜிங் விமான நிலையத்தில் அறிவித்தல் பலகையொன்று  காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன..

எவ்வாறாயினும் இந்த சம்பவத்திற்கு தீவிரவாத தாக்குதல்கள் காரணமாக அமையலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

பயணிகளில் இருவரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ள போதிலும் குறித்த இருவரும் விமானத்தில் பயணிக்கவிலலை எனவும் விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன
காணமல்போன மலேஷிய விமானத்தை தேடும் பணிகள் தீவிரம் Reviewed by NEWMANNAR on March 09, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.