போஸ்டரில் இருந்த பெண்ணின் கூந்தல் பறந்ததில் அதிர்ந்து போன மக்கள்! - படங்கள்
டெல்லி ரயில் நிலையம் ஒன்றில் விளம்பரப் பலகையில் (போஸ்டரில்) உள்ள பெண்ணின் கூந்தல் காற்றில் அலைபாய்ந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மாயமந்திரமாக இருக்குமோ என பயந்துபோன மக்களுக்கு பின்பு தான் உண்மை தெரிந்துள்ளது, அது எண்ணெய் கம்பெனி ஒன்றின் விளம்பர உக்தி என்று.
ரயில் வரும் ஓசை கேட்டால் இயங்குவது போல அந்த விளம்பரப் பலகையை வடிவமைத்துள்ளனர்.
அதன்படி, ரயில் புகையிரத நிலையத்திற்குள் நுழைந்ததும், டிஜிட்டல் பலகையில் உள்ள பெண்ணின் கூந்தல் காற்றில் அலைபாயத் தொடங்கி விடும். பின்னர் ரயில் நின்றதும் தலைமுடி கலைவதும் நின்றுவிடும்.
பின்னர், உடனடியாக அந்த விளம்பர மாடல் சிரித்தபடியே தனது கூந்தலை சரி செய்து கொள்கிறார்.
அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட எண்ணெயின் விளம்பரம் திரையில் தோன்றுகிறது.
இந்த விளம்பரத்தை முதலில் பார்ப்பவர்கள் சற்றுப் பயந்துவிடுகிறார்களாம்!
போஸ்டரில் இருந்த பெண்ணின் கூந்தல் பறந்ததில் அதிர்ந்து போன மக்கள்! - படங்கள்
Reviewed by NEWMANNAR
on
March 13, 2014
Rating:

No comments:
Post a Comment