அண்மைய செய்திகள்

recent
-

நித்திரையில் இருந்த கணவனை கோடரியால் தாக்கி கொலை செய்த மனைவி

ஹபரண, கல்ஓயாவில் வசிக்கும் பெண் ஒருவர் தனது கணவரை கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று நள்ளிரவு 12 மணியளவில்  இடம் பெற்றதாக பொலிஸார்
தெரிவித்தனர்.

46 வயதான எஸ்.பீ.வீரசேன என்ற இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார்.

கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் நீடித்ததை அடுத்து கணவன் நித்திரை கொண்ட பின்னர், மனைவி அவரை கோடரியாரல் தாக்கி கொலை செய்துள்ளார்.

கணவன் மதுபோதையில் தினமும் மனைவியை தாக்குவதே கொலைக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்ததாக சந்தேகிக்ப்படும் 29 வயதான குறித்த பெண் தன்னுடைய நான்கு வயதான  பெண்குழந்தை மற்றும் 8 மாத ஆண் குழந்தையுடன் கல்ஓயா பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் பெண் ஹிங்குராங்கொடை நீதவான்
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்
நித்திரையில் இருந்த கணவனை கோடரியால் தாக்கி கொலை செய்த மனைவி Reviewed by NEWMANNAR on March 03, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.