இந்திய – இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை நாளை மறுதினம்
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை நாளை மறுதினம் கொழும்பில் நடத்துவதற்கு இந்திய மீனவர் பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினூடாக இந்திய மீனவர் பிரதிநிதிகளின் இணக்கப்பாடு தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிமல் ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
கடந்த 21 ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருந்த மீனவர் பேச்சுவார்த்தைக்கு தமிழக மீனவர் பிரதிநிதிகள் சமூகமளிக்காமையினால் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது.
நாளை மறுதினம் இடம்பெறவுள்ள மீனவர் பேச்சுவார்த்தைக்கு 18 இந்திய மீனவர் பிரதிநிதிகளும் 11 அதிகாரிகளும் பங்கேற்றவுள்ளதாக பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.
அதே அளவான பிரதிநிதிகளும் அதிகாரிகளும் இலங்கை மீனவர் சங்கங்களில் இருந்து பங்கேற்கவுள்ளதாகவும் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிமல் ஹெட்டியாராச்சி மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்திய – இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை நாளை மறுதினம்
Reviewed by NEWMANNAR
on
March 23, 2014
Rating:

No comments:
Post a Comment