அண்மைய செய்திகள்

recent
-

மாயமான மலேசிய விமானத்தின் விமானி விமானியறைக்குள் புகைப்பிடிக்கும் பழக்கமுடையவர்- படங்கள்

மாயமான மலேசிய விமானத்தின் விமானி ஒருவர் விமானியறைக்குள் (cockpit ) புகைப்பிடிக்கும் வழக்கம் உள்ளவர் என முன்னர் பயணித்த பயணி ஒருவர் கூறியுள்ளார்.

பறிக் அப்துல் ஹமீட் என்ற குறித்த 27 வயதான விமானி தன்னையும் தனது நண்பி ஒருவரையும் விமானியறைக்குள் அழைத்து தம்முடன் அளவளாவியதாக அவர் தெரிவித்துள்ளார்.

2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தானும் தனது நண்பி ஒருவரும் பயணித்த விமானத்தினை செலுத்திய ஹமிட் என்ற விமானி வரிசையில் நின்று கொண்டிருந்த தம்மை அவதானித்ததாகவும், தாம் விமானத்திற்குள் ஏறி அமர்ந்ததும் விமான பணியாட்களை அனுப்பி விமானி அறைக்குள் வருமாறு அழைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

விமானம் மேல் எழுகின்ற சந்தர்ப்பத்தில் இருந்து தரையிறங்கும் வரையான முழுமையான பயணத்தினையும் இந்த இரு நண்பிகளும் விமானி அறையினுள்ளேயே களித்துள்ளனர்.

விமானி அறையினுள் பயணிகள் அனுமதிக்கப்படுவது முற்றிலும் தவறானது என்பது குறிப்பிடத்தக்கது.

அன்று விமானத்தினை செலுத்திய ஹமீடும் மற்றைய விமானியும் நட்புடன் பழகியதை நினைவு கூர்ந்த றூஸ் என்ற அந்த பெண் அவர்கள் புகைப்பிடித்ததையும் அவர்களின் செயற்பாடுகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

தன்னையும் தனது நண்பியான மாரீயையும் விமானிகள் இருவரும் கோலாலம்பூரில் தங்கவேண்டும் என்றும் இரவு விருந்தில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அன்புக் கோரிக்கை விடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.






மாயமான மலேசிய விமானத்தின் விமானி விமானியறைக்குள் புகைப்பிடிக்கும் பழக்கமுடையவர்- படங்கள் Reviewed by NEWMANNAR on March 12, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.