அண்மைய செய்திகள்

recent
-

திருகோணமலை அன்புவழி கிராமத்தில் கிணற்றில் வீழ்ந்து இளைஞன் பலி

இளைஞர் ஒருவர் தமது வீட்டுக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் திருகோணமலை அன்புவழி கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. 


அன்புவழிபுரம் முருகன் கோவிலடியைச் சேர்ந்தவரும் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் பழைய மாணவனுமான  மகேந்திரன் மயூரன் (வயது 24) என்ற இளைஞனே சம்பவத்தில்உயிரிழந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மேற்படி இளைஞன் தலைச்சுற்று காரணமாக வீட்டில் உறங்கிக் கொண்டிருந்ததாகவும் பின்னர் தூக்கத்தில் இருந்து எழுந்து முகம் கழுவுவதற்காக கிணற்றடிக்கு சென்று தண்ணீர் அள்ளிய வேளை தலைச்சுற்று ஏற்பட்டு தவறி கிணற்றில் வீழ்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் உயிரிழந்த இளைஞன் கிராம சேவக உத்தியோகத்தர் தரம் III ற்கு தெரிவாகி நியமனக்கடிதம் பெறுவதற்காக நாளை 6 ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்புக்கு செல்லவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை அன்புவழி கிராமத்தில் கிணற்றில் வீழ்ந்து இளைஞன் பலி Reviewed by NEWMANNAR on March 05, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.