கணவரை எரித்துக் கொன்ற பெண்ணுக்கு 20 ஆண்டுகால சிறைத் தண்டனை
அமெரிக்காவில் கணவரை எரித்துக் கொன்றதாகக் கூறப்படும் இந்தியப் பெண்ணுக்கு 20 ஆண்டுகால சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் தென் மத்திய டெக்சாஸ் பகுதியின் டிராவிஸ் நகரில் வசித்து வந்த பிமல் பட்டேல் (29) என்பவர் கடந்த 2012 ஆம் ஆண்டு பலத்த தீக்காயங்களுடன் சென் அன்றனியோ இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சுமார் 6 மாத காலமாக உயிருக்குப் போராடிய அவர், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக அவரது மனைவி ஷ்ரியா பட்டேல் (27) கைது செய்யப்பட்டார்.
பெற்ரோலை ஊற்றிக் கணவனை எரித்துக் கொன்றதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இது போதுமான சாட்சியங்களின் மூலம் அமெரிக்காவின் டிராவிஸ் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர் தனது முழு தண்டனைக் காலத்தையும் நிறைவு செய்த பின்னர் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படுவார் என கூறப்பட்டுள்ளது.
கணவரை எரித்துக் கொன்ற பெண்ணுக்கு 20 ஆண்டுகால சிறைத் தண்டனை
Reviewed by NEWMANNAR
on
March 12, 2014
Rating:

No comments:
Post a Comment