மன்னாரில் நாளை மாபெரும் சத்தியாக் கிரகம். அனைவரையும் அழைக்கின்றது கூட்டமைப்பு.
மன்னாரில் நாளை வெள்ளிக்கிழமை (21) நடைபெறவுள்ள சத்தியாக்கிர போராட்டத்தில்அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ் தேசியக்கூட்டமைப்பு,மன்னார் பிரஜைகள் குழு,மன்னார் மாவட்ட அபாது அமைப்புக்கள் ஆகியவை இணைந்தே குறித்த சத்தியாக்கிரக போராட்டத்தை நடாத்துகின்றன.
குறித்த சத்தியாக்கிரக போராட்டமானது மாந்தை திருக்கேதீஸ்வரம் மனிதப் படுகொலைக்கு பக்கச் சார்பற்ற நீதியான சர்வதேச விசாரணை நடாத்த வலியுறுத்தியும், இறுதி யுத்ததத்தில் காணாமல் போனோரை காண்டுபிடிப்பதற்கு சர்வதேச விசாரணைக் குழு அமைக்க வேண்டியும்,முள்ளி வாய்க்காலில் நடைபெற்றது இன அழிப்புத்தான் என்பதை சர்வதேசம் ஏற்று விசாரணை நடாத்த வேண்டும் என்றும்,மீள் குடியேறி நான்கு ஆண்டுகளாகியும் முறையாக அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்பதனைக் கண்டித்தும் ,இந்திய வீட்டுத் திட்டத்தில் மீள் குடியேற்ற கிராமங்கள் அரசியல் ரீதியாக புறக்கணிக்கப்பட்டுள்ளதையும்,கிளிநொச்சி தர்மபுரம் ஜெயக்குமாரியையும் அவரது மகளினதும் கைதை கண்டிப்பதுடன் அதற்கு நியாயம் கேட்பதுடன் வன்னிப் பிரதேசம் எங்கும் திடிர்ரென தொடங்கிய இராணுவ சோதனையை கண்டித்தும் திட்டமிட்ட நில அபகரிப்பும் சிங்கள குடியேற்றத்தை தடுக்கக் கோரியும் அமைதியான முறையில் சத்தியாக்கிரகம் இடம் பெறவுள்ளது.
நாளை வெள்ளிக்கிழமை மன்னார் பொது விளையாட்டரங்கில் காலை 9.30 தொடக்கம் மாலை 3.00 மணிவரையும் இடம் பெறவுள்ளது.
இதில் கலந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது .
குறித்த போராட்டத்தில் கூட்டமைப்பின் வடகிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், வடமாகாண அமைச்சர்கள்,உள்ளூராட்சி மன்றத்தினர் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
மன்னாரில் நாளை மாபெரும் சத்தியாக் கிரகம். அனைவரையும் அழைக்கின்றது கூட்டமைப்பு.
Reviewed by NEWMANNAR
on
March 20, 2014
Rating:

No comments:
Post a Comment