மன்னார் செபஸ்தியார் ஆலய வீதியில் விபத்து. இளைஞர் காயம். படங்கள்
மன்னார் செயஸ்தியார் ஆலய பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை மதியம் இடம்பெற்ற விபத்து ஒன்றில் துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்த இளைஞர் ஒருவர் காயமடைந்து மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மன்னார் புதுக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த முஹம்மது சர்யூன் என்ற இளைஞரே காயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞர் இன்று மதியம் 1 மணியளவில் மன்னார் வைத்தியசாலை பிரதான வீதியூடாக செபஸ்தியார் ஆலய வீதிக்கு துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த இராணுவம் பயணம் செய்த 'கெப்' ரக வாகனம் குறித்த இளைஞரை மோதி அருகில் இருந்த வீதித்தடையினையும் உடைத்தவாறு நிறுத்தப்பட்டது.
எனினும் குறித்த இளைஞர் சிறு காயங்களுடன் அதிஸ்டவசமாக உயிர் தப்பினர்.
அவ்விடத்தில் மக்கள் ஒன்று கூடிய நிலையில் குறித்த இளைஞன் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.குறித்த இளைஞன் பயணம் செய்த துவிச்சக்கர வண்டி கடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
மேலதிக விசாரனைகளை சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் வீதிப்போக்குவரத்துப்பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து இடம் பெற்ற இடத்தில் இருந்து சற்று தொலைவில் பெண்கள் பாடசாலை ஒன்று உள்ளது.பாடசாலை முடிவடைந்து மாணவர்கள் வீடு திரும்பும் நேரத்தில் இவ்வாறு வாகனங்கள் வேகக்கட்டுப்பாடு இன்றி செலுத்திச் செல்லப்படுவதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மன்னார் செபஸ்தியார் ஆலய வீதியில் விபத்து. இளைஞர் காயம். படங்கள்
Reviewed by NEWMANNAR
on
March 20, 2014
Rating:

No comments:
Post a Comment