படுத்திருந்தவர் மீது லொறி ஏறியது; திருகோணமலையில் சம்பவம்
திருகோணமலை, சமன்புர பகுதியில் லொறி ஒன்றின் கீழ் படுத்திருந்தவர் மீது குறித்த லொறி ஏறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை 5 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் களனி பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதான க்ளாரன்ஸ் நிகால் எட்மன் என்பவரே உயிரிழந்திருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவர் சமன்புர பகுதியில் உள்ள தனது உறவினர் ஒருவரின் வீட்டில் தற்காலிகமாக வசித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் போது க்ளாரன்ஸ் நிகால் எட்மன், லொறிக்கு அடியில் படுத்திருந்தது தெரியாமல் அவரது உறவினர் ஒருவர் லொறியை ஓட்ட முற்பட்டபோதே விபத்து நேர்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
குறித்த உறவினர் விசாரணைகளுக்காக தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
படுத்திருந்தவர் மீது லொறி ஏறியது; திருகோணமலையில் சம்பவம்
Reviewed by NEWMANNAR
on
March 11, 2014
Rating:

No comments:
Post a Comment