அண்மைய செய்திகள்

recent
-

மாயமாய்ப்போன மலேசிய விமானத்தைத் தவறவிட்டவர் காதலிக்கு அனுப்பிய ட்விட்டர் தகவல்!

கேப் டவுன் – “@Cylithria தொலைபேசியூடாக உன்னைத் தொடர்புகொள்ள முடியவில்லை, நாங்கள் விமானத்தைத் தவறிவிட்டுவிட்டோம். நானும் ரோரியும் நலம். நாங்கள் அந்த விமானத்தில் இல்லை.”

சீனாவிற்கு செல்லவிருந்து மாயமாய்ப் போன மலேசிய விமானம் MH370இல் பயணிக்கவிருந்து தனது சக ஊழியருடன் விமானத்தைத் தவறவிட்ட கெய்டன் (@Kaiden IV) தனது காதலிக்கு அனுப்பிய ட்விட்டர் தகவல் இதுதான்!

மலேசியத் தலைநகரிலிருந்து பீஜிங் செல்லவிருந்த MH370 விமானம் தாய்லாந்து வளைகுடாப் பகுதியில் பயணிக்கும்போது கட்டுப்பாட்டை இழந்து தொடர்பு துண்டிக்கப்பட்டு தற்போது காணாமற்போயுள்ளது.

227 பயணிகள் மற்றும் 12 விமானப் பணியாளர்களுடன் இந்த விமானம் காணாமற்போயுள்ள நிலையில், என்ன நடந்தது என்பது பற்றிய எவ்விதத் தகவல்களும் இதுவரை கிடைக்கவில்லை.

இந்நிலையில், கெய்டன் மற்றும் அவரது சக ஊழியர் இருவரும் விமானத்தைத் தவறவிட்டமைக்கான காரணம் தெரியவில்லை. விமானத்தைத் தவறவிட்ட பின்னர் கெய்டன் தனது காதலிக்கு அனுப்பிய ட்விட்டர் தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன.


மாயமாய்ப்போன மலேசிய விமானத்தைத் தவறவிட்டவர் காதலிக்கு அனுப்பிய ட்விட்டர் தகவல்! Reviewed by NEWMANNAR on March 11, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.