ஏ9 வாகன விபத்து; காயமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு - 2ம் இணைப்பு
யாழிலிருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்து பளை பிரதேச செயலகத்தை அண்மித்த பகுதியில் காணப்பட்ட மஞ்சல் கடவையில் பாடசாலை மாணவன் ஒருவர் கடக்க முற்பட்ட வேளை குறித்த பேருந்தினை சாரதி கடடுப்பாட்டுக்குள் கொண்டு வர முயறசித்தார். அந்த வேளை கட்டுப்பாட்டை இழந்த பேருந்து துவிச்சக்கர வண்டியை மோதியதுடன் அருகில் உள்ள தேநீர் கடை மற்றும் புடைவைக்கடை ஆகியவற்றை உடைத்து உள்நுழைந்துள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த மாணவன் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ் விபத்தில் மாணவனின் துவிச்சக்கர வண்டி முற்றாக சேதமாகியுள்ளதுடன் பேருந்தும் முற்றாக சேதமடைந்துள்ளது. இது குறித்த விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
இதேவேளை பளை மத்திய கல்லூரி மாணவன் ஜெயசேகரம் திவாகர் (வயது 13), ஜோகமலர், சபாரத்தினம், விந்துஜன், (வயது 15), செல்லையா சசிகுமார்(வயது 38), பொலிஸ் அதிகாரி டி.எம்.கமகே (வயது 48), செல்வராஜா சண்முகராஜா (வயது 41) மற்றும் உதயகுமார் (வயது 41) ஆகியோர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏ9 வாகன விபத்து; காயமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு - 2ம் இணைப்பு
யாழ் – கொழும்பு ஏ9 வீதியில் பளை பகுதியில் பஸ் ஒன்று இன்று காலை 7 மணியளவில் விபத்திற்கு உள்ளாகியுள்ளது. குறித்த வாகன விபத்தில் காயமடைந்தவர்களில் 8 பேர் தற்போது யாழ். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை வட்டரங்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணத்திற்கும் கிளிநொச்சிக்கும் இடையே சேவையில் ஈடுபடும் ஆசிரியர்கள் உள்ளிட்ட உத்தியோகஸ்தர்களுக்கான தனியார் பஸ் ஒன்றே விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
வேகமாக பயணித்த பஸ் பாதசாரிகள் கடவையில் சென்ற மாணவன் ஒருவரை மோதியுள்ளதுடன் கட்டுப்பாட்டை இழந்து கடை தொகுதியுடன் மோதியது. இதேவேளை, சாரதியின் கவனயீனம் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து, பிரதேச மக்கள் மற்றும் மாணவர்கள் சம்பவ இடத்திற்கு அருகில் முற்பகல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Reviewed by NEWMANNAR
on
March 06, 2014
Rating:

No comments:
Post a Comment