மடுவில் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை திறந்து வைக்கப்பட்டுள்ளது
யுனிசெப்’ அமைப்பின் நிதி உதவியுடன் மடுவில் அமைக்கப்பட்ட மடு பிராந்திய சுகாதாரவைத்திய அதிகாரி அலுவலகம் வைபவ ரீதியாக வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
‘யுனிசெப்’ அமைப்பின் நிதி உதவியுடன் சுமார் 27 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட குறித்த அலுவலகம் வைபவ ரீதியாக திறக்கும் வைபவம் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் என் . பரீட் தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம், வடமாகாண போக்குவரத்து, மீன்பிடி அமைச்சர் பா . டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி பிரிமூஸ் சிராய்வா ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.
இதன் போது ‘யுனிசெப்’ அமைப்பின் பிரதிநிதி எஸ் . பிரகாஸ் , வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஆர்.ரவீந்திரன், வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் யூட் ரதனி உற்பட பலர் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மடுவில் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை திறந்து வைக்கப்பட்டுள்ளது
Reviewed by NEWMANNAR
on
March 08, 2014
Rating:

No comments:
Post a Comment