பற்றைக்குள் கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலை! மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு
யாழ். அச்செழு பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை அம்மன் சிலை ஒன்று பற்றைப் பகுதிக்குள் இருந்துள்ளமை பொதுமக்களால் அவதானிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை இவ்வூரைச் சேர்ந்த ஒருவர் கால்நடைகளுக்கு குழைகள் வெட்டுவதற்காக பற்றைப் பகுதி ஒன்றிற்கு சென்ற போது அப்பற்றையின் உள்ள வேப்பமரத்தின் அடியில் ஓர் அம்மன் சிலை இருப்பதை அவதானித்துள்ளார்.
உடனடியாக அயலவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. அச்செய்தி இவ் ஊரவர்களுக்கும் அயலூரவர்களுக்கும் பரவவே குறித்த ஸ்தலத்திற்கு விரைந்த பொதுமக்கள் அம்மன் சிலையை தரிசித்து சென்றனர்.
அத்துடன் இக்கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் இச்சிலை தொடர்பாக அயலிள் உள்ள சிவகாமி அம்மன் ஆலய பூசகர் மற்றும் கிராமசேவகர் ஆகியோருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
மேலும்; சிலை காணப்பட்ட பற்றைப் பகுதி துப்பரவு செய்யப்பட்டு தற்காலிகமாக கொட்டகை ஒன்று அமைத்து இக்கிராமத்து ஆலய பூசகரின் உதவியுடன் பொங்கல் அபிசேகம் மேற்கொண்டனர்.
அத்துடன் இவ் அம்மன் சிலையினை பெருந்திரளான மக்கள் சென்று பார்வையிட்டு வணங்கிச் செல்கின்றனர்.
பற்றைக்குள் கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலை! மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு
Reviewed by NEWMANNAR
on
March 18, 2014
Rating:

No comments:
Post a Comment