மன்னாரில் சித்திரை பு த்தாண்டுக்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
மன்னார் மாவட்டச் செயலகம், பிரதேசச் செயலகங்கள், மன்னார் மாவட்ட அரச திணைக்களங்கள் மற்றும் முப்படையினரையும் இணைத்து மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் 5 ஆம் திகதி மாபெரும் தமிழ், சிங்கள புத்தாண்டு கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மன்னாரில் நடைபெறவுள்ள தமிழ், சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்தின்; முன் ஆயத்த ஏற்பாடுகள் தொடர்பிலான அவசர கலந்துரையாடல் திங்கட்கிழமை(31) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சிறியவர்கள் முதல் அனைவருக்கும் ஏற்ற வகையில் பல்வேறு விளையாட்டுப்போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மன்னார் முருங்கன் மகா வித்தியாலய பாடசாலை மைதானத்தில் எதிர்வரும் 5 ஆம் திகதி குறித்த நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. 
குறித்த கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல், உதவி மாவட்டச்செயலாளர் எம்.பரமதாசன், பிரதேசச் செயலாளர்கள் இராணுவம், பொலிஸ், கடற்படை அதிகாரிகள், திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய,
'குறித்த நிகழ்வு முழுமையான முறையில் இடம்பெற வேண்டும். எமது மாவட்டத்தில் இடம்பெறவுள்ள தமிழ்,சிங்கள புத்தாண்டு நிகழ்வு இனங்களுக்கிடையில் ஒற்றுமையினை ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும். இதற்கு அனைத்து அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என தெரிவித்தார்.
மன்னாரில் சித்திரை பு த்தாண்டுக்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
.JPG) Reviewed by NEWMANNAR
        on 
        
March 31, 2014
 
        Rating:
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
March 31, 2014
 
        Rating: 
       
 
 

 
.jpg) 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment