அண்மைய செய்திகள்

recent
-

பல நூறு வருடங்கள் பழமையான சித்தி விநாயகர் ஆலயம் இனம் தெரியாதோரால் உடைப்பு படங்கள்

வாழைச்சேனை வாகனேரி கிராமத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் இந்து மக்களால் வழிபட்டப்பட்டு வந்த விநாயகர் ஆலய மூல விக்கிரகம் நேற்று உடைக்கப்பட்டுள்ளது.குறித்த விக்கிரத்தை எடுத்துச் அருகிலுள்ள காட்டுக்குள் வீசப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வாகனேரிக் கிராமத்துக்கு காகித ஆலைக்கு அண்மையில் அமைந்துள்ள பிரதான வீதியில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. 

விக்கிரகத்தை வெளியில் எறிந்த இனம் தெரியாதோரால் இவ்வாலயத்திற்குள் மிக்சர் மற்றும் புகைத்தல் பொருட்கள் என்பவற்றை உள்ளே போட்டு விட்டு, அதனுள் இறைவனுக்கு வைக்கப்பட்ட பூக்கள், பட்டுக்கள் என்பவற்றையும் வெளியே வீசியுள்ளனர்.

இவ்வாலய விநாயகர் விக்கிரகம் வீசப்பட்ட செய்தியை கேள்வியுற்ற மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் நேற்றிரவு சம்பவ இடத்திற்குச் சென்றார்.

அங்கு ஆலயத்தையும், வீசப்பட்ட விநாயகர் விக்கிரகத்தையும் பார்வையிட்டதுடன், உடனடியாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் முறையிடுமாறு வாகனேரி இந்து மக்களை கேட்டுக் கொண்டார்.

இவ்விக்கிரகத்தை தூக்கி எரிந்தவர்கள் ஒரு போதும் இந்து சமயத்தை சார்ந்தவர்கள் அல்ல என்பதை பாராளுமன்ற உறுப்பினரிடம் பொதுமக்கள்உறுதிப்படஉரைத்துள்ளனர். இவ்விடயமாக கூடிய கவனம் செலுத்தப்படும் எனவும், இவ்வாலயத்தை இங்கு திறம்பட அமைக்கவும், மீண்டும் விக்கிரகத்தை இங்கு வைத்து பூசைகளை நடத்தவும் ஒழுங்குகள் செய்யப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.





பல நூறு வருடங்கள் பழமையான சித்தி விநாயகர் ஆலயம் இனம் தெரியாதோரால் உடைப்பு படங்கள் Reviewed by NEWMANNAR on March 31, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.